தமிழகத்தை அச்சுறுத்தும் பனி மூட்டம்..உஷார் மக்களே – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை ஏதுமின்றி வறண்ட வானிலை நிலவி வரும் நிலையிலும் மாநிலம் முழுவதும் பனிமூட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் உட்பட பொதுமக்கள் அனைவரும் கவனமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை அறிவிப்பு:
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில வாரங்களாக மிகவும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. மாநிலம் முழுவதும் எந்த மாவட்டங்களிலும் மழை அளவு எதுவும் பதிவாகவில்லை. கடலோர மாவட்டங்களை விட உள் மாவட்டங்களில் வரும் நாட்களில் வெப்பநிலை குறைவாக இருக்கும் என்றும், இதனால் பனிமூட்டம் அதிகாலை வேலைகளில் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ICG இந்திய கடலோர காவல்படையில் வேலை – 70+ காலிப்பணியிடங்கள் || Degree முடித்தவர்கள் தேவை!
குறிப்பாக தமிழக தலைநகரான சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.