தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

0
தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழகத்தில் வீடுகள் தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் மக்கள் அனைவரும் பயனடையும் விதத்தில் அமையும் என்று நம்புவதாவும் கூறி உள்ளார்.

மின்துறை அமைச்சர்:

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில் கரூரில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் ஒலிம்பியாட் நினைவு மாதிரி ஜோதியை மாணவர்கள் எடுத்து சென்றனர். மேலும், இந்த பேரணிக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து தலைமை தாங்கினார்.

திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோருக்கு IRCTC மூலம் 6 நாட்களுக்கு சுற்றுலா – அறிவிப்பு வெளியீடு!

இதனையடுத்து மனித சதுரங்க போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் பேட்டியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு விளக்கமாக பதிலளித்தார். அதாவது அண்மையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து வீடுகள் தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக அரசின் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வீடுகள் தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு அரசுக்கு மாத வாடகை செலுத்த வேண்டும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் இது அனைத்தும் பொய்யான தகவல்கள் என்று அமைச்சர் தெரிவித்தார். வீடுகள் மற்றும் குடிசை வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு அரசு சார்பில் எந்தஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் மின் கட்டணம் மக்களை பாதிக்காத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் 50 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here