இந்தியாவில் வேகமாகப் பரவும் தோல் கட்டி நோய் – 3,000 கால்நடைகள் உயிரிழப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!
கால்நடைகளின் உடல் முழுவதும் ஏற்படும் கட்டிகள் எதிரொலியாக, அவைகள் கொத்து கொத்தாக இறந்து வருகிறது. இதற்கு காரணம் ஒரு வித வைரஸ் ஆகும். இந்த வைரஸ் நோய்க்கு இதுவரை 3,000 கால்நடைகள் பலியாகி உள்ளது.
தோல் கட்டி நோய்
உலகம் முழுவதும், பொதுமக்களை தாக்கி அதிக பேரழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது தான் குறைந்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தோல் கட்டி நோய் காரணமாக கால்நடைகள் உயிரிழந்துள்ளன. தொற்று நோயான இது ராஜஸ்தானில் ஜலோர் , ஜோத்பூர், பாரான், ஸ்ரீ கங்கா நகர், ஜெய்சல்மேர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று மாதங்களில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் சுமார் 3000 மாடுகளுக்கு இந்த நோய்த்தொற்று பரவியுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக பள்ளிகளில் விளையாட்டு மைதானம் & உட்கட்டமைப்பு வசதி? அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!
மேலும் நோய்த் தொற்று தீவிரமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவர்கள் குழுவுடன் கால்நடைகளை தனிமைப்படுத்தி, நோய்த் தொற்று மேலும் பரவாமல் பாதுகாக்குமாறு கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த கட்டி நோய்க்கான சிகிச்சையோ, தடுப்பூசியோ இதுவரை இல்லை. மேலும் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் கட்டி, அதிக காய்ச்சல் மற்றும் மூக்கில் நீர் வடிதல் ஆகியவை இதன் முதன்மை அறிகுறிகளாகும். இந்த நோய் கடுமையான பொருளாதார பாதிப்பையும் தற்போது ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குஜராத்தில் சவுராஷ்டிரா பகுதி முழுவதிலும் இந்நோய் கால்நடைகளுக்கு பரவி உள்ளது. இதையடுத்து பஞ்சாபில் தீவிரமாக பரவி வரும் மர்ம நோய்க்கு 400 மாடுகள் பலியாகி உள்ளது. அடுத்தடுத்து கால்நடைகள் பலியாகி வருவதால் வட மாநிலங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் இருந்து தடுப்பூசியை வரவழைத்து கால்நடைகளுக்கு பயன்படுத்தும் நடவடிக்கை தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், இந்த நோயுடன் மற்ற நோய்கள் தாக்கியும் கால்நடைகள் உடனடியாக உயிரிழக்கின்றன.