தமிழகத்தில் 6, 7 & 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மதிப்பீடு தேர்வு கால அட்டவணை!

0
தமிழகத்தில் 6, 7 & 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மதிப்பீடு தேர்வு கால அட்டவணை!
தமிழகத்தில் 6, 7 & 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மதிப்பீடு தேர்வு கால அட்டவணை!
தமிழகத்தில் 6, 7 & 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மதிப்பீடு தேர்வு கால அட்டவணை!

தமிழகத்தில் நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு 2022 ஜனவரி 5ம் தேதி முதல் மதிப்பீட்டு தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு கால அட்டவணை அனைத்து வகுப்புகளும் அனுப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு தேர்வு:

தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. 2022 ஜனவரி 3ம் தேதி முதல் சுழற்சி முறை வகுப்புகள் செய்யப்பட்டு தினசரி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் ஆன்லைன் மூலமும், அரசின் கல்வி தொலைக்காட்சி மூலமும் வகுப்புகள் நடைபெற்றதால் 1 முதல் 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் அற்ற தேர்வு தேர்ச்சி முறை அறிவிக்கப்பட்டது. 2021-2022ம் கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.

தமிழகத்தில் நாளை (டிச.24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தற்போது மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நடுநிலை வகுப்புகளான 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு மதிப்பீட்டு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு அதன்படி 2022 ஜனவரி 5ம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளதுள்ளார். மேலும் மதிப்பீட்டு தேர்வு கால அட்டவணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பட்டுள்ளது. இந்த தேர்வு மாவட்ட அளவில் பொதுத்தேர்வாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்கான பாடத்திட்டங்கள் அனுப்படாமல் உள்ள நிலையில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது குறித்து கேள்வி எழுப்பட்டு வருகிறது.

மதிப்பீட்டு தேர்வு கால அட்டவணை:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!