மத்திய அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு – 72 காலியிடங்கள் & முழு விவரங்களுடன்..!
SJVN நீர் மின் உற்பத்தி நிறுவனம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Office Assistant, Cook- Housekeeper, Jr. Driver and Office Boy போன்ற பணிகளுக்கு என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் இப்பதிவில் கொடுத்துள்ளோம். இதன் மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | SJVN Limited |
பணியின் பெயர் | Office Assistant, Cook- Housekeeper, Jr. Driver and Office Boy |
பணியிடங்கள் | 72 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SJVN காலிப்பணியிடங்கள்:
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Office Assistant, Cook- Housekeeper, Jr. Driver and Office Boy பணிகளுக்கு கீழ்கண்டவாறு 72 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Office Assistant – 25
- Cook Housekeeper – 15
- Jr. Driver – 07
- Office Boy – 25
SJVN Limited கல்வித்தகுதி:
- இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / Graduate போன்ற பணிக்கு தகுந்த ஏதேனும் ஒன்று படித்திருப்பது அவசியம்.
- Cook பணிக்கு NCVT சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் ஆகும்.
- Driver பணிக்கு LMV லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
முன் அனுபவம் :
மேற்கண்ட பணிக்கு பதிவுதாரர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும் தகவல் அறிந்து கொள்ள அறிவிப்பில் பார்க்கவும்.
SJVN Limited வயது வரம்பு :
27.02.2022 அன்றைய தேதியில் பதிவுதாரர் 38 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய தொகை :
Office Boy பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.32,000/- மற்றும் Office Assistant, Cook- Housekeeper, Jr. Driver பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.38,000/- மாத ஊதிய தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
SJVN Limited தேர்வு முறை :
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணியை பொறுத்து Computer Based Test, Typing Test, DV , Written Test, Trade Test போன்ற பணிக்கு தொடர்புடைய தேர்வுகள் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNPSC Coaching Center Join Now
விண்ணப்ப கட்டணம் :
SC / ST / PWD போன்ற வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது ஆனால் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
SJVN Limited விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.02.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.