குக் வித் கோமாளி ஷோவில் இந்த வாரம் செஃப் தாமுவாக மாறிய சிவாங்கி – ரசிகர்கள் ஹாப்பி!

0
குக் வித் கோமாளி ஷோவில் இந்த வாரம் செஃப் தாமுவாக மாறிய சிவாங்கி - ரசிகர்கள் ஹாப்பி!
குக் வித் கோமாளி ஷோவில் இந்த வாரம் செஃப் தாமுவாக மாறிய சிவாங்கி - ரசிகர்கள் ஹாப்பி!
குக் வித் கோமாளி ஷோவில் இந்த வாரம் செஃப் தாமுவாக மாறிய சிவாங்கி – ரசிகர்கள் ஹாப்பி!

விஜய் டிவியில் ஒவ்வொரு வார சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை தெரியாதவர்களே இல்லை. அந்த அளவிற்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை விரும்பி பார்த்து வருகின்றனர். சமீபத்தில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்துதான் படுத்த படுக்கையாக இருந்த என் அம்மா உயிர் பிழைத்து சுகமாகியுள்ளார் என்றெல்லாம் வெளியாகிய ஒரு தகவல் அனைவர் மனதையும் சிலிர்க்க வைத்தது.

குக் வித் கோமாளி:

ஆரம்பத்திலே ரசிகர் பட்டாளத்தை குவித்த பெருமை இந்த நிகழ்ச்சிக்கு மட்டுமே சேரும். இவ்வாறு சீசன் 1 வெற்றி கொடுத்தது போலவே சீசன் 2 விலும் குக் மற்றும் கோமாளிகளால் மெகா ஹிட் பெற்றது. அதை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 அமோக வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இதில் முக்கிய பங்கு வகிக்கும் புகழ் தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். இவ்வாறு பட ஷூட்டிங்கில் படு பிஸியாக இருக்கும் புகழ் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மட்டும் இதில் பங்கு கொள்வார்.

ExamsDaily Mobile App Download

 

மேலும், நம்ம வீட்டு செல்லக்குட்டி என அன்போடு அழைக்க பெரும் சிவாங்கி, காமெடிக்கு பஞ்சமில்லாத பாலா, தாமு மற்றும் பட்டுவை கலாய்க்கும் தைரியம் கொண்ட மணிமேகலை, குரேஷி, என இவர்களால் ஒவ்வொரு வாரமும் ஷோ களைகட்டும். இவ்வாறு இந்த ஷோ மக்கள் மத்தியில் அதிக அளவில் இடம் பெற்றதற்கு முக்கிய காரணமே கோமாளிகள் தான் என்றே சொல்லாம். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கெட்டப் போட்டு, அதில் நகைச்சுவை செய்து நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.

ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் – ஆர் யூ ரெடி திருநெல்வேலி மக்களே!

அந்த வகையில் இந்த வாரம் புது விதமாக குக்குகளை போல் கோமாளிகள் மாறியது போன்று காஸ்டியூம் செய்துள்ளார்கள். அதாவது இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரும் குக் மற்றும் செஃப் போல் கெட்டப் போட்டு கோமாளிகள் வந்துள்ளார்கள். அதில் சிவாங்கி செஃப் தாமு போல் கெட்டப்பில் வந்து மாஸ் காட்டியுள்ளார். அதே போல், ஸ்ருதிகா போல் குரேஷி கெட்டப் போட்டுள்ளார். இவ்வாறு ஓவ்வொரு கோமாளிகளும் குக்குகளை போல் வந்து அசத்தியுள்ளார்கள். வருகிற வாரம் காத்திருக்கும் நகைச்ச்சுவையை பொறுத்திருந்து பார்த்து ரசிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here