தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட சிவகார்த்திகேயன் – ரசிகர்கள் வாழ்த்து!

0
தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட சிவகார்த்திகேயன் - ரசிகர்கள் வாழ்த்து!
தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட சிவகார்த்திகேயன் - ரசிகர்கள் வாழ்த்து!
தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட சிவகார்த்திகேயன் – ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் முதன் முறையாக தந்து மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் புகைப்படத்தை பார்த்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன்:

தமிழ் திரையுலகில் குறுகிய காலத்திலேயே தந்து திறமையான நடிப்பால் மக்கள் மத்தியிலும், குழந்தைகள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளான ‘சூப்பர் சிங்கர்’, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி தனது திறமை மூலம் மக்களின் கவனத்தை பெற்று பிரபலமானவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது நிகழ்ச்சி இவருக்கு ஒரு பெரும் பேரை கொடுத்தது. 2012-ம் ஆண்டு வெளியான ‘மெரினா’ படத்தில் நாயகனாக வெள்ளி திரையில் அறிமுகமானார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து இடைவெளி எடுத்து திருப்பதி சென்ற மீனா ஹேமா – வைரல் வீடியோ!

தனுஷின் ‘3’ படத்திலும் ‘மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய திரைப்படங்களில் நடித்தார், அடுத்ததாக இவர் நடித்த எதிர்நீச்சல் படம் இளைஞர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அப்படத்தின் பாடல்களும் மக்கள் கவனத்தை ஈர்த்தது. அடுத்தது வெற்றி படங்களை கொடுத்து இன்று நம்பர் 1 நாயகன் பட்டியலில் இருக்கிறார். இவர் தனது உறவினரான ஆர்த்தியை கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மேலும் இவருக்கு ஆராதன என்ற பெண் குழந்தை உண்டு. இவர் தயாரித்த கனா ‘படத்தில் வாயாடி பெத்த புள்ள’ பாடலில் சில வரிகள் பாடி அசத்தியது. இவரது மனைவி ஆர்த்தி இரண்டாவதாக கர்ப்பமாக இருந்தார்.

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பொது விடுமுறை அறிவிப்பு!

இந்த நிலையில் கடந்த ஜூலை 12ம் தேதி சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்த் மகிழ்ச்சியான செய்தியை தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டார். மேலும் மகன் நெற்றியில் அன்பு முத்தமிடும் புகைப்படத்தையும் பதிவிட்டார். தன் மகனுக்கு ’குகன் தாஸ்’ என்று தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதன் முறையாக தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில் அவரது மனைவி, மகள், மகன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். புகைப்படத்தை பார்த்த சிவா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here