தாஜ்மஹாலில் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படப்பிடிப்பு – வைரலாகும் புகைப்படங்கள்!

0
தாஜ்மஹாலில் நடிகர் சிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு - வைரலாகும் புகைப்படங்கள்!
தாஜ்மஹாலில் நடிகர் சிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு - வைரலாகும் புகைப்படங்கள்!
தாஜ்மஹாலில் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படப்பிடிப்பு – வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் தற்போது டான் என்ற புதிய படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு தாஜ்மஹாலில் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்:

தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் சாதனை படைத்து வருகிறார். தற்போது இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர். பின்னர் தனது மிமிக்ரி திறமையை கொண்டு மக்களின் ஆதரவை பெற்று அதே தொலைக்காட்சியில் பணியாற்றி புகழ் பெற்றார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளான ‘சூப்பர் சிங்கர்’, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்று தனது திறமை மூலம் மக்களின் கவனத்தை பெற்று பிரபலமானவர்.

பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் லட்சுமி ராமகிருஷ்ணன்? அவரே வெளியிட்ட பதிவு!

அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தில் நடித்துள்ளார். பின்னர் அதே ஆண்டு தனுஷின் ‘3’ படத்திலும் ‘மனம் கொத்திப் பறவை’ படத்திலும் நடித்துள்ளார். இவர் 3 படத்தில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர், பின்னர் மனம் கொத்தி பறவை படத்தில் ஒரு நாயகனாக நடித்து புகழ் பெற்றார். இவர் இப்படத்தில் ஒரு நகைச்சுவையாளராகவும், நாயகனாகவும் நடித்து தனது நடிப்பை நிலையேற்றியுள்ளார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவர் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்தது மாபெரும் வெற்றியை தேடி தந்தது.

ஆட்டோ டிரைவராக மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்தில் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு டான் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் ஹீரோயினாக டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஒரு பாடல் தாஜ்மஹாலில் எடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தள புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது .

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!