சந்தியா படிக்கும் அகாடமிக்கு செல்லும் சிவகாமி, தெரிய வரும் உண்மை? ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ ரிலீஸ்!

0
சந்தியா படிக்கும் அகாடமிக்கு செல்லும் சிவகாமி, தெரிய வரும் உண்மை? 'ராஜா ராணி 2' ப்ரோமோ ரிலீஸ்!
சந்தியா படிக்கும் அகாடமிக்கு செல்லும் சிவகாமி, தெரிய வரும் உண்மை? 'ராஜா ராணி 2' ப்ரோமோ ரிலீஸ்!சந்தியா படிக்கும் அகாடமிக்கு செல்லும் சிவகாமி, தெரிய வரும் உண்மை? 'ராஜா ராணி 2' ப்ரோமோ ரிலீஸ்!
சந்தியா படிக்கும் அகாடமிக்கு செல்லும் சிவகாமி, தெரிய வரும் உண்மை? ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியா படித்து வரும் அகாடமிக்கு போவதாக சிவகாமி தனது குடும்பத்தாரை அழைக்கிறார். இதனால் சந்தியா, அர்ச்சனா, ஆதி பற்றிய உண்மைகள் சிவகாமிக்கு தெரிய வருமா என்பது போல ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

ராஜா ராணி 2

விஜய் டிவியில் ஒவ்வொரு நாளும் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கக்கூடிய ஒரு சூப்பர் ஹிட் சீரியல் ‘ராஜா ராணி 2’. படித்து முடித்து IPS அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் சந்தியா என்ற பெண் சூழ்நிலை காரணமாக சரவணன் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களது திருமண வாழ்க்கையில் ஏகப்பட்ட குழப்பங்கள், பிரிவுகளை கடந்து இப்போது சந்தியாவின் கனவுக்கு சரவணன் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில் சந்தியாவின் படிப்பிற்காக சரவணன் செய்யும் விஷயங்கள் அவரது அம்மா சிவகாமிக்கு இதுவரை தெரியவில்லை.

Exams Daily Mobile App Download

இப்படிப்பட்ட கதைக்களத்துடன் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் ‘ராஜா ராணி 2’ சீரியலின் அடுத்தகட்ட எபிசோடுக்கான ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகியுள்ளது. இது குறித்த ப்ரோமோவில், தென்காசியில் சக்தி அகாடமி மைதானத்தில் திடீரென்று ஒரு சிலை தோன்றி இருப்பதாக டிவி சேனல்களில் செய்திகள் வெளியாகிறது . இந்த செய்தியை பார்க்கும் சிவகாமி அந்த சாமியாரை பார்க்க வேண்டும் என வீட்டில் இருக்கும் எல்லாரையும் கிளம்ப சொல்கிறார். இப்போது சிவகாமி சொன்னதை கேட்டதும், ஜெஸி அங்கிருக்கும் கோச்சிங் சென்டரில் படிக்கிறாள்.

அவள் நம்மை குடும்பத்துடன் பார்த்தால் அவ்வளவு தான் என எண்ணும் ஆதி என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக்கொள்கிறார். மறுபக்கத்தில், அந்த சாமியரிடம் இருந்து மருந்து வாங்கி உண்ணும் அர்ச்சனா அங்கு சென்றால் அனைத்து உண்மையும் தெரிந்து விடுமே என்று பயப்பட, சரவணன் சந்தியாவை அந்த கோச்சிங் சென்டருக்கு அழைத்து சென்றதை நினைத்து குழம்புகிறார் மயில். இப்போது சிவகாமி தன்னுடைய குடும்பத்தாருடன் அங்கு சென்றால் அவருக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரிய வருமா என்ற பரபரப்பான திருப்பங்களுடன் வெளியான ப்ரோமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here