பிக்பாஸ் நிகழ்ச்சி தாமரையை 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் – சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி ஓபன் டாக்!

0
பிக்பாஸ் நிகழ்ச்சி தாமரையை 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் - சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி ஓபன் டாக்!
பிக்பாஸ் நிகழ்ச்சி தாமரையை 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் - சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி ஓபன் டாக்!
பிக்பாஸ் நிகழ்ச்சி தாமரையை 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் – சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி ஓபன் டாக்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் கலக்கி வரும் நாட்டுப்புற நடிகை தாமரை செல்வியை சூப்பர் சிங்கர் புகழ் ராஜலக்ஷ்மிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என பேட்டி ஒன்றில் அவர் சொல்லி இருக்கிறார்.

பிக்பாஸ் தாமரை:

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் தெரியாத புது முகங்களாக இருந்தனர். ஆனால் தொலைக்காட்சி பற்றிய முன்னறிவே இல்லாதா நாட்டுப்புற கலைஞர் தாமரை செல்வி வந்தது பலரை திரும்பி பார்க்க வைத்தது. மேலும் தாமரை செல்வி நடிகர் கமல் பாராட்டி பேசும் அளவிற்கு விளையாடி வருகிறார். அனைத்து டாஸ்குகளையும் முழு ஈடுபாடுடன் செய்து வருகிறார்.

ஐஸ்வர்யாவுக்கு அட்வைஸ் செய்யும் மீனா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!

இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான செந்தில் ராஜலக்ஷ்மி ஜோடிக்கு தாமரை செல்வியை முன் கூட்டியே தெரியுமாம். சிறு வயது முதலே நாடகத்தில் நடனம் ஆடி வந்த தாமரை அந்த ஊர் முழுவதும் நல்ல பிரபலமாக இருக்கிறார். தாமரை பற்றி ராஜலக்ஷ்மி ஒரு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அப்போது தாமரை அக்காவை எனக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் ஒரு மேடை நிகழ்ச்சியில் நடனமாட வந்தது முதல் தெரியும்.

தனது மகளுடன் வீடியோ வெளியிட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஜீவா – இணையத்தில் வைரல்!

அப்போது நான் அவருடன் பேசினேன் பின் அவரை பார்க்கவோ பேசவோ இல்லை. மீண்டும் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்ததற்கு மிகவும் சந்தோசம். இன்னும் 2 வாரங்களில் இறுதிச்சுற்று வர இருப்பதால் அவர் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். தற்போது மக்கள் மனம் கவர்ந்த டாப் 8 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். டிக்கெட் டூ பைனல் டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் தாமரை அதை பெற்றுக் கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here