கதாநாயகியாக அறிமுகமாகும் “பீஸ்ட்” பட பாடகி ஜோனிடா காந்தி – ரசிகர்கள் உற்சாகம்!

0
கதாநாயகியாக அறிமுகமாகும்
கதாநாயகியாக அறிமுகமாகும் "பீஸ்ட்" பட பாடகி ஜோனிடா காந்தி - ரசிகர்கள் உற்சாகம்!
கதாநாயகியாக அறிமுகமாகும் “பீஸ்ட்” பட பாடகி ஜோனிடா காந்தி – ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் “பீஸ்ட்” படத்தில் அரபிக் குத்து பாடலை பாடி பிரபலமானவர் பாடகி ஜோனிடா காந்தி அவர் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

பாடகி ஜோனிடா காந்தி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் இளையதளபதி விஜய் அவர்களின் 60வது படம் “பீஸ்ட்” விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அரபிக் குத்து என்ற பாடல் கடந்த வாரம் வெளியாகி தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பின்னணி பாடகி ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருந்தனர். மேலும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதி இருந்தார். பாடலே இவ்வளவு அருமையாக இருந்தால் படம் எந்த அளவிற்கு இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

‘நம்ம வீட்டு பிள்ளை’ சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று – குவியும் வாழ்த்துக்கள்! கடந்து வந்த பாதை!

இந்நிலையில் இந்த பாடலில் அனிருத் உடன் இணைந்து பாடிய பாடகி ஜோனிடா காந்தி தமிழ் சினிமாவில் பல வெற்றி பாடல்களை பாடி இருக்கிறார். செல்லமா, மறந்தாயே, மெண்டல் மனதில் போன்ற காதல் பாடல்கள் தற்போது வரை ஹிட்டாக இருக்கிறது. அவரை பாடகியாக ரசித்து வந்த அவரது ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது பாடகி ஜோனிடா காந்தி தற்போது கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா யார் தெரியுமா? யாரும் அறியாத ஸ்வாரசியமான தகவல்கள் இதோ!

அவர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் உருவாகி வரும் ‘ walking talking strawberry ice cream ‘ எனும் படத்தில் ஜோனிடா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் கிருஷ்ணா குமார் நடிக்கிறார். இவர் சூரரை போற்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர், மேலும் இந்த படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!