உலகின் தலை சிறந்த விமான நிலைய பட்டியலில் இணைந்த சிங்கப்பூர் ஏர்போர்ட்!!

0
உலகின் தலை சிறந்த விமான நிலைய பட்டியலில் இணைந்த சிங்கப்பூர் ஏர்போர்ட்!!
உலகின் தலை சிறந்த விமான நிலைய பட்டியலில் இணைந்த சிங்கப்பூர் ஏர்போர்ட்!!
உலகின் தலை சிறந்த விமான நிலைய பட்டியலில் இணைந்த சிங்கப்பூர் ஏர்போர்ட்!!

உலகின் தலை சிறந்த விமான நிலையங்களுக்கான பட்டியலில் சிங்கப்பூர் விமான நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கத்தார் மற்றும் டோக்கியோ விமான நிலையம் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

விமான நிலையம்

உலகளவில் மிகச் சிறப்பாக செயல்படும் விமான நிலையங்களுக்கான பட்டியலில் சிங்கப்பூர் விமான நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில், சாங்கி விமான நிலையம் சிறந்த விமான நிலையங்களில் முதல் இடத்தை பிடிப்பது இது 12 ஆவது முறையாகும். அதன்படி, கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக முதல் இடத்தை பிடித்து வந்த சாங்கி விமான நிலையம் இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் சிறந்த விமான நிலையங்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் கத்தாரில் உள்ள ஹமது சர்வதேசிய விமான நிலையம் மற்றும் மூன்றாவதாக ஜப்பானின் டோக்கியோ சர்வதேசிய விமான நிலையம் இடம்பிடித்துள்ளது. இப்போது, சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் சாங்கி விமான நிலையம் தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விமான நிலையம் பெரும்பாலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் கருடா இந்தோனேசியா போன்ற விமான நிறுவனங்களை சார்ந்து இயங்குகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!