8000 அரசு பணியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பணி உயர்வு – அரசாணை வெளியீடு!

0
8000 அரசு பணியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பணி உயர்வு - அரசாணை வெளியீடு!
8000 அரசு பணியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பணி உயர்வு - அரசாணை வெளியீடு!
8000 அரசு பணியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பணி உயர்வு – அரசாணை வெளியீடு!

மத்திய அரசின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டில் பணி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரே நாளில் 8000 பேருக்கு பணி உயர்வு வழங்கப்படவுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பணி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் போட்டித்தேர்வின் அடிப்படையில் தான் பணி நியமனம் பெறுகின்றனர். அதாவது, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் தகுதியான ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 4000 ஊழியர்கள் பதவி உயர்வு பெற்றனர். இதனை தொடர்ந்து தற்போது ஒரே நேரத்தில் 8,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய செயலகப் பணியை சேர்ந்த 327 இயக்குனர்கள், 1,097 துணை செயலாளர்கள், 1,472 பிரிவு அலுவலர்கள் ஆகியோர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், செயலக எழுத்தர் சேவையில் உள்ள ஸ்டெனோகிராஃபர்கள், முதன்மை பணியாளர்கள் அதிகாரிகள், எழுத்தர்கள் மற்றும் மத்திய செயலக ஸ்டெனோகிராபர்களும் இந்த பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து 157 முதன்மை பணியாளர் அதிகாரிகள் மற்றும் 153 மூத்த முதன்மை தனியார் செயலாளர்கள், மத்திய செயலக ஸ்டெனோகிராபர்கள், 1,208 முதன்மை தனி செயலாளர்களும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதாவது மொத்தமாக தற்போது வரைக்கும் ஒரே நாளில் 8,089 பேர் பணி உயர்வு பெற்றுள்ளனர்.

தமிழக மக்களுக்கு அமைச்சரின் எச்சரிக்கை பதிவு – வெளியான தகவல்!

இந்த பணி உயர்வு பட்டியலில் 727 பட்டியல் சாதியினருக்கும், 207 பழங்குடியினருக்கும் என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன மற்றும் 5,032 பதவி உயர்வுகள் முன்பதிவு செய்யப்படாத பதவிகளுக்கானது எனவும் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தலைமைச் செயலகத்தில் ஒரே நேரத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here