ஆன்லைனில் FASTag ரீசார்ஜ் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆன்லைனில் FASTag ரீசார்ஜ் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைனில் FASTag ரீசார்ஜ் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைனில் FASTag ரீசார்ஜ் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் ஆன்லைன் மூலம் பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை இந்த பதிவில் காண்போம்.

பாஸ்டேக் ரீசார்ஜ் :

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்லும் போது நேரம், எரிபொருள் விரயம் ஆவதை தடுப்பதற்காக பாஸ்டேக் திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அறிமுகம் செய்தது. இதன்படி வாகனத்தின் முகப்பில் பார்கோடு அடங்கிய பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். அதன்பிறகு சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்கும்போது அங்குள்ள கருவிகள் தானாகவே கட்டணத்தை பெற்று கொள்ளும் முறை நடைமுறைக்கு வந்தது. இதற்காக 22 முக்கிய வங்கிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 41,806 பேருக்கு கொரோனா பாதிப்பு – 581 பேர் உயிரிழப்பு!!

இந்த பாஸ்டேக் பெறுவதற்கு வாகனத்தின் ஆர்.சி புத்தக நகல், இருப்பிடம் மற்றும் அடையாள சான்று நகல்கள், பாஸ்போர்ட் புகைப்படம் ஆகிய ஆவணங்கள் அவசியம் ஆகும். பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்தால் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பாஸ்டேக் பயனாளர்களின் வசதிக்காக ஆன்லைன் மூலம் பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும் வழிமுறைகள் :
  • முதலில் Google Play Store-ல் Google Pay செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அதில் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை பதிவிட வேண்டும்.
  • புதிய பக்கம் உருவாகும் அதில் UPI ID Or QR Code என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • UPI ID என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களின் பாஸ்டேக் UPI ID-ஐ அங்கு உள்ளிட வேண்டும்.
  • அடுத்த நடைமுறையாக உங்களின் பாஸ்டேக் விவரங்கள் காண்பிக்கப்படும். விவரங்களை உறுதி செய்து விட்டு தொடர வேண்டும்.
  • பிறகு ரீசார்ஜ் தேர்வை தேர்ந்தெடுத்து PAY என்பதை கிளிக் செய்யவும். அதில் தொகையை பதிவிட்டு உங்கள் Google Pay UPI ID எண்ணை உள்ளீடு செய்து பாஸ்டேக் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!