முதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைன் மூலம் பெறும் எளிய வழிமுறைகள் இதோ!

10
முதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைன் மூலம் பெறும் எளிய வழிமுறைகள் இதோ!
முதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைன் மூலம் பெறும் எளிய வழிமுறைகள் இதோ!
முதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைன் மூலம் பெறும் எளிய வழிமுறைகள் இதோ!

தமிழக அரசால் முதல் பட்டதாரிக்கு வழங்கப்படும் சலுகைகளை பெற்றுக்கொள்ள அதற்கான சான்றிதழ் கட்டாயம். இந்த சான்றிதழை தற்போது ஆன்லைன் வழியாகவே, கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றி எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

முதல் பட்டதாரி சான்றிதழ்:

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு என ஒரு சிறப்பு சலுகை கொடுக்கப்படுகிறது. அதாவது ஒரு குடும்பத்தில் முதன் முதலாக ஒருவர் பட்டதாரி ஆகிறார் என்றால், அவருக்கென கொடுக்கப்படும் சிறப்பு சலுகைகளை பெற்றுக்கொள்ள முதல் பட்டதாரி சான்றிதழ் கட்டாயம். இந்த சலுகைகளை பெற்றுக்கொள்ள ஒரு முக்கிய நிபந்தனை என்னவன்றால், ஒருவரது வீட்டில் முதல் பட்டதாரிக்கு முன், அதாவது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என எவரும் பட்டப்படிப்பு முடித்திருக்க கூடாது. மேலும் விண்ணப்பதாரரின் தம்பி அல்லது தங்கை பட்டப்படிப்பு படிக்கிறவர்களாக இருக்கலாம்.

தமிழக அரசு பள்ளிகளில் TC இன்றி மாணவர் சேர்க்கை – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

அந்த வகையில் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு தற்போது ஆன்லைன் வழியாக எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் புகைப்படம், அவரது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதி & வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரி பத்திரம், குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய கல்வி சான்றிதழ் ஆகியவை தேவைப்படும். தொடர்ந்து சான்றிதழுக்காக விண்ணப்பிக்க,

  • முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்துக்குள் உள் நுழையவும்.
  • அதில் Revenue department என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  • பிறகு First Graduate Certificate என்பதை தேர்வு செய்யவும்.
  • அதில் ரிஜிஸ்டர் எண் என்பதை கிளிக் செய்யவும் அல்லது உங்கள் பெயர் மற்றும் தந்தை பெயரை கொடுக்கவும்.
  • உங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்து OTP ஜெனரேட் செய்யவும்.
  • இப்போது உங்களுக்கு வரும் OTP எண்ணை கொடுத்து Proceed ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

TN Job “FB  Group” Join Now

  • பிறகு பின்னர் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பம் வரும், அந்த படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • மேலே கொடுக்கப்பட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.
  • பிறகு Self Declaration Form உங்களுக்கு கொடுக்கப்படும்.
  • அதை பிரிண்ட் செய்து மீண்டுமாக Scan செய்து பதிவேற்றவும்.
  • இதற்கான கட்டணமாக 60 ரூபாய் வசூலிக்கப்படும்.
  • அடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS வரும்.
  • அதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
  • கடைசியாக ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டவுடன், பட்டதாரி சான்றிதழை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!