மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

1
மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

இந்தியாவின் குடிமக்களாக இருந்தால் அனைத்து விதமான விவகாரங்களுக்கும் ஆதார் கார்டு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் ரிஜிஸ்டர் செய்த மொபைல் நம்பர் இல்லாமல் எவ்வாறு ஆதார் கார்டு பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஆதார் கார்டு:

இந்திய அரசு வழங்கும் பல சலுகைகளை பெற ஆதார் கார்டு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஆதார் கார்டு எண்ணை UIDAI என்று கூறப்படும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் அனைத்து நபர்களுக்கும் தனித்துவமான அடையாள எண்ணை வழங்குகிறது. ஆதார் கார்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக வைத்திருத்தல் அவசியம். ஆதார் கார்டு பெற வேண்டும் என்றால், ஆதார் மையம், வங்கி அல்லது தபால் நிலையம் ஏதேனும் ஒன்றிற்கு சென்று பதியலாம்.

ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் பெயரை ஆன்லைனில் மாற்றம் செய்வது எப்படி?

பதிவு செய்ததற்கு பின்பாக, UIDAI வழங்கும் பதிவு ஐடி, வர்ஜுவல் ஐடி கொண்டு அச்சடித்து கொள்ளலாம். ஆதார் கார்டு எண் வழங்கப்பட்டதும், அதனை பதிவிறக்கம் செய்து கொண்டும் அச்சிடலாம். பலரும் ஆதார் எண் பதிவிடும் போது ஒரு மொபைல் எண் கொடுத்திருப்பர். ஆனால், காலப்போக்கில் அந்த எண்ணை மாற்றி இருக்கலாம். இதனால் ஆதார் கார்டு பதிவிடும் போது கொடுத்துள்ள ரெஜிஸ்டர் நம்பர் இல்லாமல் எவ்வாறு ஆதார் கார்டை பெறலாம் என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு பெறும் வழிமுறைகள்

  • ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் எண் பெற வேண்டும் என்றால்,
  • அருகில் இருக்கும் ஆதார் மையத்திற்கு பான் கார்டு மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பின், அங்கு உங்களது கட்டை விரல் சரிபார்ப்பு மற்றும் ரெட்டினா ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை சரி பார்க்க வேண்டும்.
  • உங்களது பான் கார்டு மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும். இந்த சரிபார்ப்பு களுக்கு பிறகு உங்களது ஆதார் கார்டு அச்சிடப்பட்டு அளிக்கப்படும்.
  • சாதாரண காகித வடிவத்தில் ஆதார் கார்டு பெற வேண்டும் என்றால் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பிவிசி வடிவத்தில் பெற வேண்டும் என்றால் 100 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here