ஆன்லைனில் ரேஷன் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆன்லைனில் ரேஷன் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைனில் ரேஷன் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைனில் ரேஷன் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

ஒரு நபரின் அடையாள ஆவணமாகவும், அரசு தரும் சலுகைகளை பெற்றுக் கொள்ளவும் பயன்படும் ரேஷன் அட்டைகளை இப்போது ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு பதிவிறக்கம்:

அரசு தரும் சலுகைகள், நிதி உதவி, ரேஷன் பொருட்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள ரேஷன் அட்டைகள் முக்கிய ஆவணமாகும். அந்த வகையில் தமிழகத்திலும் இந்த ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு தான் ரூ.4 ஆயிரம் கொரோனா நிதி உதவி, இலவச மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இது தவிர இந்த ரேஷன் அட்டைகள் ஸ்மார்ட் அட்டைகளாக தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவ்வகை சேவைகளை பெற்று தரும் ரேஷன் அட்டைகள் தொலைந்து விட்டால் நீங்கள் கலங்க தேவையில்லை.

ஜூலை 19ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தற்பொழுது அதிகளவு மக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக பல சேவைகளை இருந்த இடத்தில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளும் வகையில் ரேஷன் அட்டைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். அதன்படி புதிய ரேஷன் அட்டைகள், அட்டைகளில் உறுப்பினர் பெயரை சேர்ப்பது, நீக்குவது உள்ளிட்ட சேவைகளை ஆன்லைன் வழியாகவே பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக வாடிக்கையாளர்கள் அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டியதில்லை. அதன்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றி புதிய ரேஷன் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

  • முதலாவதாக TNPDS ன் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  • இதில் ரேஷன் அட்டைதாரரின் சுயவிவர பதிவை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்னர் ரேஷன் அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
  • அதை உள்ளிட்டால் சுயவிவர பக்கம் திறக்கும்.

TN Job “FB  Group” Join Now

  • TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் என்ற ஆப்ஷன் தோன்றும்.
  • அதில் விரும்பும் மொழியை தேர்வு செய்து பிரிண்ட் கொடுக்கவும்.
  • இதை PDF கோப்பாகவும் சேமித்து கொள்ளலாம்.
  • இந்த ஆவணத்தை வைத்து நீங்கள் வட்ட வழங்கல் அலுவலகம் சென்று புதிய ரேஷன் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.
  • இது தொடர்பான மேலும் விவரங்களை 1967 அல்லது 1800 425 5901 என்ற எண்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here