ஆன்லைனில் ஆதார் அட்டை பதிவிறக்கம் – எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆன்லைனில் ஆதார் அட்டை பதிவிறக்கம் - எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைனில் ஆதார் அட்டை பதிவிறக்கம் - எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைனில் ஆதார் அட்டை பதிவிறக்கம் – எளிய வழிமுறைகள் இதோ!

ஒருவர் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் ஆதார் அட்டைகளை ஆன்லைன் மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளும் தற்போது விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை பதிவிறக்கம்

வங்கி உள்பட பல அரசாங்க சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய ஆதார் அட்டைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அட்டைகளை நாம் எவ்வளவு கவனமாக கையாண்டாலும், சில சமயங்களில் அவற்றை எங்காவது தொலைத்து விடக்கூடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் இணைப்பை நீங்கள் பெற்றிருந்தால் வங்கியின் பல பரிவர்த்தனைகளுக்கும், அரசாங்க திட்டங்களின் நன்மைகளைப் பெறுவதற்கும் இவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – கல்விக்கடன் ஆவணங்கள்!

இந்த வசதியை ஒருவர் வீடுகளில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளும் வகையில் UIDAIன் ஆதார் பதிவிறக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸ் போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்கு பெரிதும் உதவக்கூடியதாக இருக்கிறது. இது குறித்த UIDAI ட்வீட்டின் படி, ‘தனிநபர்கள் ஆதார் அட்டையில் உள்ள அனைத்து எண்ணையும் காண்பிக்கும் 12 இலக்க ஆதார் ஐடியின், கடைசி நான்கு இலக்கங்களை மட்டுமே தெரியும் Masked Aadhaar அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். அதற்காக https://eaadhaar.uidai.gov.in. என்ற இணையதளத்தை பயன்படுத்தி உங்கள் ஆதார் அட்டையை எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்த அறிவிப்பின் படி, https://eaadhaar.uidai.gov.in. என்ற வலைதளத்தை திறந்தால் ஆதார் பதிவிறக்கத்தில் மூன்று விருப்பங்கள் கொடுக்கப்படும்.
  • அதாவது முதல் விருப்பம் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும், இரண்டாவது enrolment ID யை உள்ளிடவும், மூன்றாவது virtual IDயை உள்ளிட வேண்டும்.
  • அடுத்ததாக தேவையான விவரங்களை அளித்த பிறகு, படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களை டைப் செய்து ‘send OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்.

TN Job “FB  Group” Join Now

  • OTP எண் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
  • பிறகு சரிபார்ப்பு OTP ஐக் கிளிக் செய்த பிறகு, SMS வழியாக ஆதார் எண் அனுப்பப்படும்.
  • பின்னர் கொடுக்கப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
  • தொடர்ந்து ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கான விருப்பம் தோன்றும்.
    பதிவிறக்கத்தை தேர்ந்தெடுத்து save செய்து கொள்ளவும்.
  • இந்த ஆதார் அட்டை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்யப்படும்.
  • இந்த ஆவணத்தை மடிக்கணினி அல்லது டிஜிட்டல் சாதனம் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • கூடுதலாக, மின்-ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு கடவுச்சொல் கேட்கப்படும்.
  • அந்த கடவுச்சொல்லை வைத்து பதிவிறக்கம் செய்தவுடன் அதை மீண்டும் திறக்க சிறப்பு கடவுச்சொல்லை உபயோகிக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!