ஆதார் அட்டையில் உள்ள போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறை இதோ!

0
ஆதார் அட்டையில் உள்ள போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறை இதோ!
ஆதார் அட்டையில் உள்ள போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறை இதோ!
ஆதார் அட்டையில் உள்ள போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறை இதோ!

ஆதார் அட்டையில் இடம் பெற்றுள்ள உங்கள் புகைப்படங்கள் தெளிவானவையாக இல்லாமலும், பழைய புகைப்படமாகவும் இருந்தால் அவற்றை ஆதார் மையங்களில் அப்டேட் செய்து ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது குறித்த கூடுதல் விளக்கங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

புகைப்படம் மாற்றம்:

தனித்துவ அடையாள அட்டை ஆவணமான ஆதார் அட்டைகள் தற்பொழுது பல வகையான சேவைகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த ஆதார் அட்டைகளில் ஒரு பயனரின் புகைப்படம், பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளதால் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாகவும் கருதப்படுகிறது. தவிர இந்த ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள 12 இலக்க எண்ணை வைத்து நம்முடைய தகவல்களை அரசால் பெற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி தலையாசிரியர்களுக்கு நோட்டீஸ் – அரசு தேர்வுத்துறை நடவடிக்கை!

இந்த ஆதார் அட்டைகளில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை நாம் ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்ள கூடிய வகையில் எளிய வழிமுறைகளை UIDAI அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது ஆதார் அட்டைகளில் புகைப்படத்தை எப்படி மாற்றுவது என்பது குறித்த விவரங்களை விரிவாக காணலாம். இந்த சேவைகளுக்காக முதலில் நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை அணுகவும். அங்கு புகைப்படம் மாற்றுவதற்கான படிவங்கள் கொடுக்கப்படும்.

அதில் தேவையான தகவல்களை பூர்த்தி செய்து அதனை ஆதார் மைய ஊழியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் புகைப்படம், கண் மற்றும் கை ரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களை கொடுக்கவும். அடுத்ததாக நீங்கள் கொடுத்துள்ள விவரங்களை இதனுடன் இணைத்து ஆதார் அப்டேட் செய்யப்படும். இதற்காக நீங்கள் ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும். பிறகு உங்களுக்கு கொடுக்கப்படும் UAN எண்ணை வைத்து ஆதார் புதுப்பிப்பு தொடர்பான அப்போதைய நிலையை சரிபார்த்து கொள்ள முடியும்.

TN Job “FB  Group” Join Now

இந்த புதிய ஆதாரை பதிவிறக்கம் செய்ய, UIDAI ன் அதிகாரப்பூர்வ வலைதளத்துக்கு செல்லவும். அங்கு ஆன்லைனில் பதிவிறக்கம் என்ற தேர்வின் கீழ் சாதாரண ஆதார் அட்டை அல்லது Masked ஆதார் அட்டை என்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அப்டேட் செய்தவுடன் mAadhaar செயலியில் உங்கள் தகவல்களை புதுப்பிக்க வேண்டும். இந்த செயல்பாடுகளை முடித்தவுடன் ஏறத்தாழ 15 முதல் 20 நாட்களுக்குள் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டைகள் உங்கள் கைக்கு கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!