PhonePe, Google Pay, Paytm கணக்கை பிளாக் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

0
PhonePe, Google Pay, Paytm கணக்கை பிளாக் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
PhonePe, Google Pay, Paytm கணக்கை பிளாக் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
PhonePe, Google Pay, Paytm கணக்கை பிளாக் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

சில சமயங்களில் நம் கைகளில் இருக்கும் மொபைல் போன் தொலைந்து விட்டால், இன்டர்நெட் பேங்கிங் செயல்பாடுகளை அதாவது PhonePe, Google Pay, Paytm போன்ற பண பரிமாற்ற செயலிகளை பிளாக் செய்வது முக்கியமாகும். அதற்கான விரிவான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பிளாக் செய்யும் வழிமுறை

தற்போது அனைவரின் கைகளில் இருக்கும் மொபைல் சாதனங்கள் மூலம் பண பரிமாற்றம் என்பது எளிமையாகிவிட்டது. ஆம், பண பரிமாற்றத்துக்காக இப்போது வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வீடுகளில் இருந்தபடியே உலகின் எந்தவொரு மூலையில் இருப்பவர்களுக்கும் பரிமாற்ற வசதிகளை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள முடியும். இப்படிப்பட்ட சேவைகளை செய்வதற்கு மிகவும் முக்கியமானது இந்த மொபைல் சாதனங்கள் தான்.

ஆகஸ்ட் 2 முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி – மாநில அரசு உத்தரவு!

ஒருவேளை, ஏதொருவோரு சமயத்தில் நீங்கள் மொபைல் போனை தொலைக்க நேரிட்டால், உடனே மொபைல் பேங்கிங் சேவைகளை பிளாக் செய்ய வேண்டியது அவசியம். அதாவது பண பரிமாற்ற சேவைகளில் அதிகளவு பயன்படும் Paytm, Google Pay, PhonePe செயலிகளை நாம் கவனத்துடன் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் வேறொரு மூன்றாம் நபர் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்ய முடியும். அதனால் போன் தொலைந்தவுடன் Paytm, Google Pay, PhonePe சேவைகளை பிளாக் செய்ய வேண்டும்.

அந்த வகையில் இந்த கணக்கை முடக்குவது குறித்த வழிமுறைகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி முதலாவதாக

PhonePe கணக்கை பிளாக் செய்ய,
  • 08068727374 அல்லது 02268727374 எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.
  • அதில் விருப்ப மொழியை தேர்ந்தெடுத்த பிறகு PhonePe தொடர்பான புகார் அளிப்பது குறித்து கேட்கப்படும்.
  • அதில் சொல்லப்படும் சரியான காரணத்தை தேர்வு செய்ய, ஏதாவதொரு எண்ணை அழுத்தவும்
  • பின்னர் உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்ட பிறகு OTP அனுப்பப்படும்.
  • அடுத்ததாக சிம் அல்லது டிவைஸ் என்ற ஆப்சன் கொடுக்கப்படும்.
  • அதில் சரியானவற்றை தேர்வு செய்யவும்.
  • இதனுடன் உங்கள் இமெயில் ஐடி, கடைசி கட்டணம் போன்ற தகவல்களை அவர்கள் பெற்றிருப்பார்கள்.
  • பின்னர் உங்கள் அழைப்பு ஒரு பிரதிநிதியுடன் இணைக்கப்படும்.
அடுத்ததாக Paytm கணக்கை பிளாக் செய்ய,
  • முதலில் 01204456456 என்ற கட்டண வங்கி உதவி எண்ணுக்கு அழைக்கவும்.
  • அதில் லாஸ்ட் போன் விருப்பத்தை தேர்வு செய்யவும்.
  • பின்னர் மற்றொரு எண்ணை உள்ளிடும் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
  • பின்னர் தொலைந்த மொபைல் எண்ணை உள்ளிடவும்.

TN Job “FB  Group” Join Now

  • அடுத்து Paytm இணையத்துக்கு சென்று 24 * 7 உதவியை அழைத்து அறிக்கை
  • மோசடியை தேர்வு செய்யவும். தொடர்ந்து கணக்கை நிரூபிக்க டெபிட் அல்லது கிரெடிட் கார்டு போன்ற ஆதாரம் கேட்கப்படும்.
  • அதற்கு பின்னாக SMS மூலம் உறுதிப்படுத்தப்படும்.
இறுதியாக Google Pay செயலியை பிளாக் செய்ய,
  • 18004190157 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கவும்.
  • பிறகு விருப்ப மொழியை தேர்வு செய்யவும்.
  • மேலும் Google கணக்கை பிளாக் செய்ய ஒரு பிரதிநிதியுடன் பேசுவதற்கான விருப்பத்தை தேர்வு செய்யவும்.
  • இந்த சேவைகளில் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது டேட்டா முழுவதையும் நீக்க முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!