வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 20+ காலிப்பணியிடங்கள் – ரூ.35,000/- வரை சம்பளம்..!

0
வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 20+ காலிப்பணியிடங்கள் - ரூ.35,000/- வரை சம்பளம்..!
வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 20+ காலிப்பணியிடங்கள் - ரூ.35,000/- வரை சம்பளம்..!
வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 20+ காலிப்பணியிடங்கள் – ரூ.35,000/- வரை சம்பளம்..!

தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Siddha Doctor, Driver, Yunani Doctors, Homeopathic Doctor, Ayurvedic Doctor ஆகிய பணிகளுக்கான இடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் South India Multi-State Agriculture Co-Operative Society Ltd (SIMCO)
பணியின் பெயர் Siddha Doctor, Driver, Yunani Doctors and Others
பணியிடங்கள் 26
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

SIMCO பணியிடங்கள்:

தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கத்தில் (SIMCO) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
  • Siddha Doctor – 06
  • Homeopathic Doctor – 06
  • Ayurvedic Doctor – 06
  • Yunani Doctors – 06
  • Driver – 02
SIMCO கல்வி தகுதி:

Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BSMS, BHMS, BAMS, BUMS ஆகியவற்றில் ஏதேனும் ஒரு Degree-முடித்தவராக இருக்க வேண்டும்.

SIMCO வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 22 எனவும் அதிகபட்சம் 35 எனவும் SIMCO நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SIMCO சம்பளம்:

Driver பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு குறைந்தபட்சம் ரூ.8,500/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மற்ற பணிகளுக்கு தேர்வாகும் பணியாளருக்கு குறைந்தபட்சம் ரூ.15,800/- முதல் அதிகபட்சம் ரூ.35,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

SIMCO தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

SIMCO விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் செய்யலாம். 31.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

மேலாண்மை இயக்குனர்,
தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO),
டவுன்ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில்,
வேலூர் – 632 004.

SIMCO Notification Link

SIMCO Application Link

Official Website   

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!