விஜய் டிவி “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சிம்பு – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பிக்பாஸ் அல்டிமேட்" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சிம்பு - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சிம்பு – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கிய நிலையில் அவர் தற்போது நிகழ்ச்சியை விட்டு விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக பிரபல நடிகர் ஒருவர் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி ஆகும். தமிழில் முதன்முறையாக விஜய் டிவியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஐந்து சீசன்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் புதிதாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதில் இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களிலும் கலந்து கொண்டு மக்கள் ஆதரவுடன் விளையாடி ஆனால் கடைசி நேரத்தில் வெற்றி பெறாமல் வெளியேறிய போட்டியாளர்கள் களமிறங்கினார்கள்.

‘கல்யாணம் கல்யாணம்’ புதிய சீரியலில் இணையும் செம்பருத்தி ஷபானா & பாரதி – உற்சாகத்தில் ரசிகர்கள்!

அவர்களில் ஒருவர் தான் பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு மூன்று வாரங்கள் ஆன நிலையில் அதில் 4 பேர் எலிமினேட் ஆகி இருக்கின்றனர். மேலும் தற்போது நான்காவது வாரம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் இருந்தே சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் குமரன் திருமண வீடியோ – குவியும் லைக்குகள்!

அதனால் நிகழ்ச்சி பார்க்கும் ரசிகர்கள் விறுவிறுப்புடன் பார்க்கின்றனர். மேலும் இதுவரை இல்லாதது போல இல்லாமல் 24 மணி நேரமும் நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை கமல் தொகுத்து வழங்கிய நிலையில், அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!