விஜய் டிவி “பிக் பாஸ்” நிகழ்ச்சிக்காக சிம்பு வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பிக் பாஸ்" நிகழ்ச்சிக்காக சிம்பு வாங்கும் ஒரு நாள் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக் பாஸ்” நிகழ்ச்சிக்காக சிம்பு வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சின்னத்திரையில் மாபெரும் வெற்றி கண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின், புதிய பரிமாணமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டது. அதை நடிகர் கமல் தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது அவர் விலகி சிம்பு தொகுத்து வழங்க இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் கூட ரசிகர்களாக இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகண்ட நிலையில், புதிதாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அதில் இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரலையில் ஒளிபரப்பாகி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்கினார்.

கண்ணம்மாவை பாராட்டி தள்ளிய பாரதி – வெறுப்பில் வெந்து போன வெண்பா! சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

மேலும் 14 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 4 பேர் எலிமினேட் ஆகி 10 பேர் இந்த வாரம் விளையாடினார்கள். அதில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு நடிகர் கமல் விலகி இருப்பதாகவும் கடைசி வாரம் தான் அவர் கலந்து கொள்ள போகிறார் என தெரிவிக்கப்பட்டது.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ராதிகாவுடன் சேர்ந்த கோபி!

அதை தொடர்ந்து நடிகர் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது போல ப்ரோமோ வெளியானது. சிம்பு களமிறங்கி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தாலும், கமல் விலகியதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர். இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!