
Common Wealth 2022: 10,000 மீட்டர் ஓட்டத்தில் மகளிர் பிரிவில் வெள்ளி பதக்கம் – வாழ்த்தி வரும் மக்கள்!
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 72 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இன்று காமன்வெல்த் 10,000 மீட்டர் நடை ஓட்டத்தில், மகளிர் பிரிவில் இந்தியா வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது.
வெள்ளி பதக்கத்தை வென்ற இந்தியா:
2022 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் பர்மிங்ஹாமில் கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டை போல காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் 2018-ம் ஆண்டு நடைபெற்றது. முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட் விளையாட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் இந்தியா அதிக அளவில் பதக்கங்களை வாரிக் குவிக்கும் துப்பாக்கி சுடுதல் போட்டி இம்முறை நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளின் 8 வது நாளான நேற்று இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம் தற்போது இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கையானது 26 என உயர்ந்துள்ளது. அத்துடன் பதக்க பட்டியலிலும் 5 வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தீபக் புனியா ஆகியோர் தங்க பதக்கத்தையும், அன்ஷு மாலிக் வெள்ளிப்பதக்கத்தையும், திவ்யா காக்ரன், மோஹித் க்ரீவால் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
தமிழக சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – ஐந்தருவியில் குளிக்க அனுமதி
இதைத்தொடர்ந்து காமன்வெல்த் போட்டிகளின் 9வது நாளான இன்று (ஆகஸ்ட் 6), மல்யுத்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து வினேஷ் போகத், ரவிக்குமார் தாஹியா என புதிதாக 6 பேர் பங்கேற்கவுள்ளனர். இதை தொடர்ந்து காமன்வெல்த் 10,000 மீட்டர் நடை ஓட்டத்தில் மகளிர் பிரிவில் இந்தியாவின் பிரியங்கா வெள்ளி பதக்கம் வென்றார். அதாவது 43.38 நிமிடங்களில் இலக்கை அடைந்து பிரியங்கா வெள்ளி பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.