கொரோனா பாதித்த இந்திய வீரர் ஷிகர் தவானின் தற்போதைய உடல்நிலை – அவரே அளித்த விளக்கம்!

0
கொரோனா பாதித்த இந்திய வீரர் ஷிகர் தவானின் தற்போதைய உடல்நிலை - அவரே அளித்த விளக்கம்!
கொரோனா பாதித்த இந்திய வீரர் ஷிகர் தவானின் தற்போதைய உடல்நிலை - அவரே அளித்த விளக்கம்!
கொரோனா பாதித்த இந்திய வீரர் ஷிகர் தவானின் தற்போதைய உடல்நிலை – அவரே அளித்த விளக்கம்!

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடருக்கு இந்திய அணி அகமதாபாத்துக்கு சென்ற போது RT-PCR பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் இந்திய அணியில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதில் தற்போது இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்

வைரலாகும் வீடியோ பதிவு:

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி மூன்றிலும் தோல்வியடைந்து தொடரை கைப்பற்ற தவறியது. இதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. இத்தொடரில் இந்திய ஒயிட் பால் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெற்று அணியை வழிநடத்துவார் என்று BCCI தெரிவித்துள்ளது. மேலும் ரோஹித் சர்மா தலைமையிலான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் BCCI அறிவித்தது.

IPL க்கு முன், IPL க்கு பின் – இரு கட்டமாக நடத்தப்படும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்!

இந்திய வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒரு நாள் போட்டி வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொடருக்கான வீரர்கள் அனைவரும் கடந்த ஜனவரி 31ஆம் தேதி, அகமதாபாத் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர். அப்போது நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் , ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், பேக்கப் வீரர் நவ்தீப் சைனி ஆகியோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

அண்ணா பல்கலையில் தினமும் ரூ. 797 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஷிக்கர் தவானின் ரசிகர்கள் அவர் நோய்த் தொற்றில் இருந்து மீண்டும் வருமாறு ஒரு ஹாஷ் டாக்கை ட்ரெண்டிங் செய்தனர் . தற்போது இதுகுறித்து ஷிக்கர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். மேலும் நான் நன்றாக இருக்கிறேன் என்றும் நோய் தொற்றில் இருந்து மீண்டு வந்து ஒருநாள் தொடரில் விளையாடுவேன் என்றும் கூறினார். தவான் வெளியிட்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!