நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் – உயர் நீதிமன்றத்தின் முக்கிய கருத்து!
நீட் தேர்வுக்கு எதிராக அரசு கையெழுத்து இயக்கம் என்ற போராட்டத்தை நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நீட் தேர்வு:
நீட் தேர்வுக்கு எதிராக சுமார் 50 லட்சம் கையெழுத்துக்களை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் துவங்கினார். இந்த இயக்கத்தின் கீழ் மாணவர்கள் கையெழுத்திடும் படி நிர்பந்திக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பள்ளி வளாகத்தில் அரசியல் நடவடிக்கைகளை அனுமதிக்க கூடாது நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணும் மாணவர்கள் மனதில் ஏற்படுவதாகவும் படிப்பிலிருந்து மாணவர்களின் கவனம் திசை திரும்பும் எனவும் கூறப்பட்டது.
தமிழகத்தில் நவ.10 (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் இயங்கும் – உணவுத்துறை அறிவிப்பு!!
அதனால் பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க கூடாது என பள்ளி கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிக்கு உரிமை உள்ளது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனையடுத்து நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.