பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – மருத்துவ துறை அறிவிப்பு!!

0
பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு - மருத்துவ துறை அறிவிப்பு!!
பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு - மருத்துவ துறை அறிவிப்பு!!
பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – மருத்துவ துறை அறிவிப்பு!!

தமிழக பாரம்பரிய படிப்புகளான சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இணைய வழியாக கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கப்பட்டது. டிசம்பர் 31-ஆம் தேதி இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு செய்வதற்கு கடைசி தேதி முடிவடைந்த நிலையில் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு:

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் செயல்படும் 5 அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 330 மருத்துவ பணியிடங்களும், 20 தனியார் கல்லூரிகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. எஞ்சிய இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. இந்த இடங்களுக்கான இணைய விண்ணப்பம் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி தொடங்கப்பட்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது.

புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு உண்டா?? பயனாளர்கள் குழப்பம்!!

இந்திய மருத்துவ படிப்புகளுக்கான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த படிப்புகளின் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் நடைபெற்றது. இந்நிலையில், இதில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

இந்நிலையில் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த மாதம் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டது. அதன்படி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,492 விண்ணப்பங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,346 விண்ணப்பங்களும் சமா்ப்பிக்கப்பட்டன. இந்நிலையில் அனுப்பி வைக்கப்பட்ட இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அடுத்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் அதற்கான கலந்தாய்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!