SIDBI வங்கியில் BE, ME முடித்தவருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
SIDBI வங்கியில் BE, ME முடித்தவருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
SIDBI வங்கியில் BE, ME முடித்தவருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
SIDBI வங்கியில் BE, ME முடித்தவருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Information Security, Consultant, Data Scientist பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Small Industries Development Bank of India (SIDBI)
பணியின் பெயர் Information Security, Consultant, Data Scientist
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

SIDBI காலிப்பணியிடம்:

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Information Security, Consultant, Data Scientist பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
SIDBI தகுதி விவரம்:

Information Security பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Computer Science / IT / Data Science / Machine Learning பாடப்பிரிவில் B.E. / B.Tech / M.E. / M.Tech போன்ற டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் data Scientist சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் finance பாடப்பிரிவில் MBA / PGDM டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் Excel, Python, linear regression, logistic regression, data mining / predictive modelling ஆகியவற்றில் திறன் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Data Scientist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் finance பாடப்பிரிவில் MBA / PGDM டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் Excel, Python, linear regression, logistic regression, data mining / predictive modelling ஆகியவற்றில் திறன் வைத்திருப்பவர்கள் மற்றும் FRM, PRM போன்ற சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIDBI வயது வரம்பு:

30.04.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது 30 வயது முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

SIDBI ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வாகும் நபர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ள பணி மற்றும் பதவிக்கு ஏற்றார்ப்போல் தகுதி மற்றும் திறனுக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

SIDBI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் பணிக்கு தேவையான தகுதி வாய்ந்த நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

SIDBI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!