ரூ.28.39 லட்சம் ஊதியத்தில் SIB வங்கியில் காத்திருக்கும் பணியிடம் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.28.39 லட்சம் ஊதியத்தில் SIB வங்கியில் காத்திருக்கும் பணியிடம் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.28.39 லட்சம் ஊதியத்தில் SIB வங்கியில் காத்திருக்கும் பணியிடம் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.28.39 லட்சம் ஊதியத்தில் SIB வங்கியில் காத்திருக்கும் பணியிடம் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சவுத் இந்தியன் வங்கியில் (SIB) காலியாக உள்ள Senior Technical Architect, EFT Switch Admin, Finacle Administrator போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வில்லாது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் South Indian Bank Limited (SIB)
பணியின் பெயர் Senior Technical Architect, EFT Switch Admin, Finacle Administrator and others
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

சவுத் இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

Senior Technical Architect, Enterprise Technology Architect, Cloud Architect, EFT Switch Admin, Finacle Interface Administrator, Finacle Administrator போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் சவுத் இந்தியன் வங்கியில் (SIB) காலியாக உள்ளது.

சவுத் இந்தியன் வங்கி வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் 31.07.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 35 வயது முதல் 45 வயது வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சவுத் இந்தியன் வங்கி கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Sc, BE, B.Tech, M.Sc, ME, M.Tech, MCA, MBA ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

சவுத் இந்தியன் வங்கி அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணி சார்ந்த துறைகளில் 04 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

SIB சம்பளம்:

இந்த வங்கி பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.9.33 லட்சம் முதல் ரூ.28.39 லட்சம் வரை மாத சம்பளம் பெறுவார்கள்.

SIB விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

SIB தேர்வு செய்யும் விதம்:

இந்த வங்கி பணிக்கு தகுதியான நபர்கள் Initial Shortlisting, Technical Interview மற்றும் Final Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIB விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் https://recruit.southindianbank.com/RDC/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 08.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!