வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் ஷாப்பிங் அம்சம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

0
வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் ஷாப்பிங் அம்சம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் ஷாப்பிங் அம்சம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் ஷாப்பிங் அம்சம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியில் தற்போது ஷாப்பிங் அம்சங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த அம்சங்கள் மூலம் வாட்ஸ் அப் பயனர்கள் தங்களுக்கு தேவையானவற்றை ஆன்லைன் வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.

ஷாப்பிங் அம்சம்

பொதுவாக தற்போதுள்ள இளைய (இணைய) தலைமுறையினர் பலர் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இந்த ஆன்லைன் ஷாப்பிங் முறை மூலம் ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்தே எவ்வகையான பொருட்களையும் ஷாப்பிங் செய்து கொள்ள முடியும். தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஆன்லைன் ஷாப்பிங் முறைகள், வாட்ஸ் அப்பிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்த தகவலை பேஸ்புக் நிறுவனத்தின் செயல் அதிகாரி மார்க் ஸுகர்பெர்க் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஜூன் 25ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் – மக்கள் கவனத்திற்கு!

அந்த வகையில் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப், ஷாப்பிங் அம்சத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இது குறித்து மார்க் ஸுகர்பெர்க் கூறுகையில், பயனர்களின் ஷாப்பிங் ஆர்வத்தை தூண்டும் வகையில், வாட்ஸ் அப் செயலியில் ஷாப்பிங் அம்சத்துக்கு தேவையான விளம்பரங்கள் கொடுக்கப்படவுள்ளன. முன்னதாக கடந்த ஆண்டில், சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், ஷாப்பிங் முறையை அறிமுகப்படுத்தியது.

TN Job “FB  Group” Join Now

இதனை மாதந்தோறும் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துவதாகவும், இதன் மூலம் சுமார் 1.2 மில்லியன் கடைகள் செயல்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் இந்த அம்சத்தை மேம்படுத்துவதற்காக வரும் வாரங்களில் புகைப்படங்கள் பகிர்வு, ஒரே மாதிரியான பொருட்களை காட்சிப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் வாட்ஸ் அப் செயலியில் ஷாப்பிங் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!