‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்ணனுக்கு நடந்த சோகம் – வைரலாகும் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்ணனுக்கு நடந்த சோகம் - வைரலாகும் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்ணனுக்கு நடந்த சோகம் - வைரலாகும் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்ணனுக்கு நடந்த சோகம் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கண்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சரவண விக்ரம் தற்போது சீரியல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை தனது யூடியூப் பக்கத்தில் பகிர அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகர் சரவண விக்ரம்

சமீப காலமாக பல்வேறு திருப்பங்கள் நிறைந்த எபிசோடுகளுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மக்களின் விருப்பதிக்கேற்ற ஒன்றாக இருந்து வருகிறது. விஐய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில், தற்போது புதிய கடை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முக்கிய கதைக்களமாக காட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிதாக கட்டப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு ஒரு பிரச்சனை முளைத்தெழும்ப, அது எதனால் ஆனது என்று ஒரு விவரமும் தெரியாமல் மொத்த குடும்பமும் விக்கித்து நிற்கிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு – புதிய கடை திறப்பு விழா! வைரலாகும் வீடியோ!

இதற்கிடையில், கண்ணன் மூலமாக உருவான பிரச்சனை இப்போது கடை வரை பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இப்போது அண்ணன், தம்பிகள் சேர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடையை எப்படி மீட்கப்போகிறார்கள் என்ற கோணத்தில் சீரியல் எபிசோடுகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கும் கண்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சரவண விக்ரம்.

தமிழ் சின்னத்திரைக்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் அறிமுகமான நடிகர் சரவணன் தற்போது மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று வருகிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சரவணன் தனது பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் சரவண விக்ரம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

சமந்தா, தனுஷை தொடர்ந்து விவாகரத்து பெற இருக்கும் விஜய் பட நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!

அந்த வீடியோவில், சரவண விக்ரம் தனது பிப்ரவரி மாத ஷெட்யூல், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் உயயோகப்படுத்தும் கார்கள், தங்கும் அறை, அவுட்டோர் ஷூட்டிங் ஸ்பாட் போன்ற பல இடங்களை ரசிகர்களுக்கு சுற்றி காட்டி இருந்தார். மேலும் அன்றைய நாளுக்கான ஷூட்டிங் முடித்து, மற்ற அனைத்து நடிகர்களும் சென்று விட்ட நிலையில் கேப் கிடைக்காததால் தனித்து விடப்பட்ட நடிகர் சரவண விக்ரம் என்ஜின் வேனில் பயணம் செய்துள்ள சில சோக காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பிடித்துள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!