தமிழக பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சி அறிக்கை – கோடை விடுமுறை நாட்களில் புதிய சிக்கல்!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சி அறிக்கை - கோடை விடுமுறை நாட்களில் புதிய சிக்கல்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சி அறிக்கை - கோடை விடுமுறை நாட்களில் புதிய சிக்கல்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சி அறிக்கை – கோடை விடுமுறை நாட்களில் புதிய சிக்கல்!

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கோடை விடுமுறை நாட்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பில் மாற்றங்கள் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோடை விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதலுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் பாடங்களை விரைவாக நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா தாக்கத்தால் நீண்ட நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

தனது நீண்ட நாள் ஆசையை அடைந்த ராஷ்மிகா – ரசிகர்களுக்கு நன்றி! வைரலாகும் பதிவு!

இதனால் பொதுத்தேர்வுக்கு முன்னதாக மாணவர்களை தயார் படுத்தும் விதமாக திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுத்தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரையும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9-ந்தேதி ஆரம்பித்து 31-ந்தேதி வரையும், 10-ம் வகுப்புக்கு மே மாதம் 6-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரையிலும் நடக்க இருக்கிறது. 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை இறுதி தேர்வுகள் நடக்க உளது.

தமிழகத்தில் ஏப்ரல் 13 பள்ளிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

இது தவிர 1 முதல் மே 13ம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும் என்றும் மே 13ம் தேதி இறுதி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஜூன் 13ம் தேதி முதல் அடுத்த கல்வியாண்டு தொடங்கும் என்றும், பள்ளிகள் அன்றைய தினம் அனைத்து வகுப்புகளுக்கும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மே 13 முதல் ஜூன் 12 வரை மொத்தம் 30 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கல் அதிகமாக இருப்பதால் அரசின் அறிவிப்பு குறித்து பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here