‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் இருந்து விலகிய ஷிவாங்கி? வெளியான ஷாக்கிங் தகவல்!
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் இந்த வாரம் புகழ் கோமாளியாக என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், ஷிவாங்கி இந்த ஷோவில் கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோமாளி ஷிவாங்கி
இதுவரை 2 சீசன்களாக ஒளிபரப்பப்பட்டு சூப்பர் ஹிட் அடித்திருந்த ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. எதிலும் புதுமை படைக்கும் விஜய் டிவியில் நகைச்சுவையை, நாவின் சுவையான சமையலுடன் கலந்து வழங்கி மக்களின் ஏகபோக ஆதரவை சம்பாதித்திருக்கும் இந்த ‘குக் வித் கோமாளி’ ஷோ தற்போது 3வது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. பொதுவாக இந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் தனித்துவம் என்னவென்றால் கோமாளிகளாக வரும் காமெடி நட்சத்திரங்கள் தான்.
TN Job “FB
Group” Join Now
அந்த வகையில் கடந்த சீசன்களில் கலந்து கொண்ட புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா ஆகியோர் மக்களின் பேவரைட் ஆன கோமாளிகளாக இருந்து வருகின்றனர். ஏனென்றால் இவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் வித்தியாசமான நகைச்சவை பாணி காணப்படுவதால் இவர்களுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் புகழை எடுத்துக்கொண்டால் உடல் மொழிகள், தவறான வார்த்தை உச்சரிப்பு, முக பாவனை மூலம் அவர் ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிகிறார்.
அதே போல ஷிவாங்கியின் அப்பாவித்தனம், மணிமேகலையின் கேலி, கிண்டல்கள், பாலாவின் பன்ச் வசனங்கள், சுனிதாவின் தமிழ் உச்சரிப்பு என ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஸ்டைல் உண்டு. குறிப்பாக ‘குக் வித் கோமாளி’ ஷோவில் புகழ் மற்றும் ஷிவாங்கியின் அண்ணன், தங்கை கலாட்டாக்கள் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் பெற்றிருந்தது. இப்படி இருக்க ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 முடிவடைந்து 8 மாத இடைவெளியில் புகழ், ஷிவாங்கி ஆகியோர் பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்து வந்தனர்.
தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வழிகாட்டுதல்கள்!
அதனால் இவர்கள் இருவரும் 3வது சீசனில் கலந்து கொள்வார்களா என்று மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்நிலையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் லான்ச் எபிசோடில் ஷிவாங்கி மட்டும் கோமாளியாக கலந்து கொண்டிருந்தார். ஆனால் புகழ் வரவில்லை. இருப்பினும் புகழ் இல்லாதது அந்த செட்டே வெறுமையாக இருப்பது போல உணர்த்தியது. இந்நிலையில் இந்த வார ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் புகழ் மீண்டும் கோமாளியாக கலந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான ப்ரோமோ ஒன்று வெளியாகி எக்கச்சக்க வரவேற்புகளை பெற்றிருந்தது.
ஆனால் இந்த வார எபிசோடில் ஷிவாங்கி கலந்து கொள்ளவில்லை என்ற செய்தி அவரது ரசிகர்களை தற்போது அதிருப்திக்குளாக்கி இருக்கிறது. கிட்டத்தட்ட 9 மாதங்கள் கழித்து புகழ் – ஷிவாங்கி கலாட்டாக்களை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஷிவாங்கி இல்லாதது வருத்தத்தை கொடுத்துள்ளது. இப்போது சினிமா திரைப்பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் ஷிவாங்கி அடுத்த வாரம் ‘குக் வித் கோமாளி’ ஷோவில் கோமாளியாக வருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அடுத்த வார எபிசோடில் புகழும் இடம்பெற வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.