விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – சீரியலில் இருந்து விலகும் பாரதி!

0
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – சீரியலில் இருந்து விலகும் பாரதி!

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனலில் ஒன்று விஜய் டிவி . இந்த டிவி சேனலில் 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் நடித்து வந்த நடிகர், நடிகைகள் மாறி கொண்டே இருக்கிறார்கள். இந்த வரிசையில் ஹீரோ பாரதிக்கு பதிலாக வேற ஒரு நடிகர் கமிட் ஆக உள்ளாராம்.

ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்:

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் பயங்கர விறுவிறுப்பாக, பல ட்விஸ்ட்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல் கதைபடி, கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே பாரதியை காதலித்து வரும் வெண்பா அவருடன் தோழியாக பழகி கொண்டிருக்கிறார். இடையில் பாரதி, ஹேமா என்ற பெண்ணை காதலிப்பது தெரிந்ததும் அவரை லாரி ஏற்றி கொலை செய்து விடுகிறார்.தொடர்ந்து பாரதி மற்றும் வெண்பாவுக்கு இடையே ஒரு சிறிய இடைவெளி விழுக , திடீரென பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் திருமணம் ஆகிறது.

கோபி தான் என்னுடைய அப்பா என்கிற அனைத்து உண்மைகளையும் போட்டுடைக்கும் எழில் – அதிர்ச்சியில் ராதிகா!

என்னதான் பாரதி ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தாலும், அவரை அடைய வேண்டும் என்பதற்காக இல்லாத பொய்களை சொல்லி இருவரையும் 8 வருடங்களாக பிரித்து வைத்து விட்டார் வெண்பா. இதற்கிடையில் வெண்பாவை விடவும் இப்போது அவரின் அம்மா ரோல் பயங்கர ரீச். நடிகை ரேகா தான், வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா என்ற ரோலில் நடித்து வருகிறார். இவர், வெண்பாவுக்கு திருமணம் செய்து வைக்க அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார். அதுமட்டுமில்லை வந்த முதல் நாளே பாரதியையும் வெண்பாவையும் பிரிந்துவிட்டார். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, பாரதி கேரக்டரில் நடித்து வரும் அருண் பிரசாத்தை மாற்ற போகிறார்களாம்.விரைவில் அருண் பிரசாத்திற்கு பதிலாக புதிய பாரதி என்ட்ரி கொடுக்க போகிறாராம்.

ஏற்கனவே கண்ணம்மா ரோலில் நடித்த ரோஷினிக்கு பதிலாக விதுஷா நடிப்பதையே ரசிகர்களால் ஏற்க முடியாமல் பலர் இந்த சீரியல் பார்ப்பதையே நிறுத்தி விட்டார்கள். இந்நிலையில் இனி பாரதி ரோலில் அருண் பிரசாத்திற்கு பதிலாக பிரபல சீரியல் நடிகரும் நடிகர் விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் நடிக்க போகிறாராம்.இவர் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன் 5 ல் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட்டார். சன் டிவியில் திருமதி செல்வம், கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான சஞ்சீவ், தற்போது பாரதி கண்ணம்மா சீரியலிலும் என்ட்ரி கொடுக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here