வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் – கடனுக்கான வட்டி விகிதம் 4.40% ஆக உயர்வு!

0
வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் - கடனுக்கான வட்டி விகிதம் 4.40% ஆக உயர்வு!
வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் - கடனுக்கான வட்டி விகிதம் 4.40% ஆக உயர்வு!
வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் – கடனுக்கான வட்டி விகிதம் 4.40% ஆக உயர்வு!

உலகப் பொருளாதாரத்தின் நிலைமை மோசமடைந்து வருகிறது. பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தம் தொடர்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் கவலை அளிக்கிறது என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தனது உரையில் கூறினார். மேலும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி வீதம் 40 புள்ளிகளை உயர்த்தி 4.40 சதவீதமாக உயர்த்துவதாகவும், இந்த உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் இன்று அறிவித்துள்ளார்.

வட்டி விகிதம் 4.40% ஆக உயர்வு:

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், ரெப்போ விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.40% உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை கடைசியாக 22 மே 2020 அன்று மாற்றியது. அந்த வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4%ஆக நீடித்து வந்தது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35%ஆக நீடித்து வந்தது. நாடு முழுவதும் பொருட்கள் மற்றும் நிதிச் சந்தைகளில் பற்றாக்குறை மற்றும் நிலையற்ற தன்மை மிகவும் தீவிரமடைந்து வருகின்றன.

Exams Daily Mobile App Download

இதனால் தான் குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதம் 40 புள்ளிகளை உயர்த்தி 4.40 சதவீதமாக உயர்த்துவதாக தாஸ் கூறினார். பணவீக்கத்திற்கு எதிரான போரை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. ஆண்டின் பெரும்பகுதியில் பணவீக்கம் எதிர்பார்ப்பை விட அதிகமாகவே இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுநோய் துவங்கியது முதல், அதன் முதல் திட்டமிடப்படாத விகித மாற்றத்தில், ரிசர்வ் வங்கி அதன் மறு கொள்முதல் விகிதத்தை 4.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக இந்த விகிதம் மிகக்குறைவாக 4 சதவீதமாக நிலையாக வைக்கப்பட்டிருந்தது.

JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை..!

ரிசர்வ் வங்கியின் கொள்கை வகுப்பாளர்கள், 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வங்கியின் இலக்கின் உச்ச வரம்பை நுகர்வோர் விலைகள் மீறியதால், விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என குறிப்புக்காட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரெப்போ விகிதம் 40 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) உயர்த்தி 4.40 சதவீதமாக அமலுக்கு வருவதற்கு, அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here