தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் – பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் - பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் - பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் – பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதிவாகாததால், ரேஷன் கடை ஊழியர்கள் அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கி வரச்சொல்லி வயதானவர்களை அலைக்கழித்து வருகின்றனர். இந்த வகையில் காரைக்குடி மாவட்டத்தில் ஒரு மூதாட்டி தாலுகா அலுவலகம் முன்பு, கையெழுத்து வாங்க வழி தெரியாமல் கண்ணீருடன் நின்ற வரை, ரேஷன் தாசில்தார் நிர்மலா அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

முதியவர்கள் அவதி:

தமிழகத்தில் உள்ள சாமானிய மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருள்களை மலிவு விலையில் ரேஷன் கடைகளில் வாங்கி வருகின்றனர். மேலும் ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருட்களை வாங்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. இந்த பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும் போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை. இதன் காரணமாக அவர்கள் பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. கைரேகை பதிவை புதுப்பித்து வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அலைக்கழிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

Exams Daily Mobile App Download

மேலும் கைரேகை பதிவு இல்லாமல் பொருட்கள் வழங்கக்கூடாது என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் பலருக்கும் கைரேகை பதிவதில்லை அதிகாரிகளிடம் கூறினாலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் காரைக்குடி தாலுகாவில் 140 ரேஷன் கடைகள் மூலம் 91 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக பல ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்சனை காரணமாக வயதானவர்களுக்கு கைரேகை பதிவாகாததால், ரேஷன் பொருட்கள் வழங்க மறுத்த கடை ஊழியர்கள், தாலுகா அலுவலகத்தில் கையெழுத்து வாங்கி வரச் சொல்லி முதியோர்களை அலைக்கழித்து வருகின்றனர். அந்த முதியவர்கள் கையெழுத்து வாங்க பல தினங்களாக தாலுகா அலுவலகத்திற்கு அலைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மே 31 கடைசி நாள்!

இதுவரை கையெழுத்து வாங்கவில்லையாம், இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் நேற்று தாலுகா அலுவலகம் முன்பு, கையெழுத்து வாங்க வழி தெரியாமல் கண்ணீருடன் மூதாட்டி ஒருவர் நின்றிருந்தார், அவரை பார்த்த ரேஷன் தாசில்தார் நிர்மலா அழைத்து உடனடி நடவடிக்கை எடுத்தார். தாசில்தார் நிர்மலா கூறியது, ரேஷன் கடைகளில் முதியவர்களுக்கு கைரேகை பதிவாவதில் சிக்கல் உள்ளது. கைரேகை பதிவாகாதவர்களிடம் இருந்து மொத்தமாக விண்ணப்பம் பெற ரேஷன் கடை ஊழியர்களிடம் அறிவுறுத்தியிருந்தோம். ஆனால், தகவல் சரியாக கிடைக்காத சில ரேஷன் ஊழியர்கள் முதியவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து விடுகின்றனர் என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here