TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த ஷாக் அறிவிப்பு – தவறவிடும் 50,000+ மாணவர்கள்!
பி.எட் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், TET தேர்விற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13 தான் கடைசி தேதி என்பதால் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு TET தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
TET தேர்வு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வினை நடத்தி வருகிறது. டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) க்கு விண்ணப்பிக்கலாம். TET இரண்டு தாள்களை கொண்டது. முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி பயின்றவர்கள் எழுதலாம். இரண்டாம் தாளை பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எழுதலாம் மற்றும் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் முதல் தாளையும் எழுதலாம்.
செம்பருத்தி ஷபானா நடிப்பில் விஜய் டிவியில் ‘செல்லப்பிள்ளை’ புது சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!
TET தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளியானது. மேலும், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதலாம் ஆண்டு பி.எட். தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத காரணத்தினால் ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவளின் காரணமாக TET தேர்வு நடைபெறவில்லை. இந்தாண்டு தேர்விற்காக பலரும் காத்து கொண்டிருந்த வேளையில் 50,000க்கும் மேற்பட்டோருக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பி.எட். மாணவர்களின் முதலாம் ஆண்டு தேர்வு பிப்ரவரி 16 ஆம் தேதி தான் முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு எப்படியும் சில நாட்கள் ஆகும். ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாவது சந்தேகமே. இதனால் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்களால் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத முடியாது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் எம் கோவிந்தன் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்