விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் கதாபாத்திரம் – ஷாக் ரிப்போர்ட்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் கதாபாத்திரம் - ஷாக் ரிப்போர்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் கதாபாத்திரம் – ஷாக் ரிப்போர்ட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் இல்லத்தரசிகளின் தினசரி வாழ்க்கையை மையமாக கொண்ட கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. கோபி ராதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்து விட்டார். அது பற்றி தெரிந்த தாத்தாவும் பக்கவாதம் வந்து முடங்கி இருக்கிறார். அதனால் குடும்பமே வருத்தத்தில் இருக்கிறது. பாக்கியா தன்னுடைய பிசினஸ் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு தாத்தாவை கவனித்து வருகிறார். ஈஸ்வரி தனது கணவரை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். ராதிகாவிற்கு விவாகரத்து கிடைத்துவிட கோபியை விரைவில் விவாகரத்து வாங்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார். ஆனால் குடும்பத்தின் நிலை சரி இல்லாமல் இருக்க கோபி என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இனி வரும் எபிசோடுகளில் ராதிகா கோபியை நேரடியாக வக்கீலிடம் அழைத்து செல்கிறார். அங்கே விவாகரத்து பாத்திரத்தை கொடுத்து கோபியை உங்களது மனைவியிடம் கையெழுத்து வாங்கி வர சொல்கிறார்கள். கோபி அந்த பத்திரத்துடன் வீட்டிற்கு வர அங்கே சுமங்கலி பூஜை நடைபெறுகிறது. அதை பார்த்து கோபி எப்படி இதை கேட்பது என தெரியாமல் இருக்க, பாக்கியாவின் மாங்கல்யத்தில் ஈஸ்வரி குங்குமம் வைக்க சொல்கிறார். விவாகரத்து வாங்கும் நேரத்தில் இப்படி ஒரு சூழ்நிலையை நினைத்து கோபி அதிர்ச்சி அடைகிறார்.

இப்படி தினமும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியலில் அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாக தங்களுடைய பங்களிப்பை கொடுத்து நடித்து வருகின்றனர். கதைக்கு அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியமாக இருக்கும் நிலையில், சீரியலில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜித்ரா தான் அதிகமாக சம்பளம் வாங்குகிறாராம். அவர் மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் வாங்கும் சம்பளம் விவரம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

  • பாக்கியலட்சுமி (சுசித்ரா) – ரூ 15000
  • சதீஷ் (கோபி) – ரூ 12000
  • ராதிகா (ரேஷ்மா) – ரூ 12000
  • ஜெனி (திவ்யா கணேஷ்) – ரூ 10000
  • செழியன் (ஆர்யன்) – ரூ 10000
  • எழில் (விஷால்)- ரூ 10000
  • இனியா (நேஹா மேனன் ) -ரூ 8000

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!