Iphone பயனர்களுக்கான ஷாக் ரிப்போர்ட் – இனி WhatsApp செயல்பாடு ரத்து!

0
Iphone பயனர்களுக்கான ஷாக் ரிப்போர்ட் - இனி WhatsApp செயல்பாடு ரத்து!
Iphone பயனர்களுக்கான ஷாக் ரிப்போர்ட் - இனி WhatsApp செயல்பாடு ரத்து!
Iphone பயனர்களுக்கான ஷாக் ரிப்போர்ட் – இனி WhatsApp செயல்பாடு ரத்து!

அக்டோபர் மாதம் முதல் சில குறிப்பிட்ட ஐபோன் பதிப்புகளில் வாட்ஸ்அப் செயல்பாடு நீக்கப்படவுள்ளதாக சில அறிக்கைகள் வெளிவந்துள்ளது. இதனை பற்றிய முழு விவரமும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஷாக் ரிப்போர்ட்:

ஆப்பிளின் சமீபத்திய அப்டேட் சில பழைய ஐபோன்களில் இன்ஸ்டண்ட் மெசேஜிங் ஆப் ஆக உள்ள வாட்ஸ்அப் செயல்படாது என்று கூறுவதால், சில பழைய ஐபோன்கள் வாட்ஸ்அப்பை ஆதரிப்பதை விரைவில் நிறுத்தக்கூடும். இதற்கான அறிக்கையின் படி, அக்டோபர் 24 ஆம் தேதி முதல், வாட்ஸ்அப் பயன்பாடு iOS 10 மற்றும் iOS 11 சாதனங்களை ஆதரிப்பதை நிறுத்துவதாகக் கூறப்படுகிறது. iOS 10 அல்லது iOS 11 நிரலின் பதிப்புகளைப் பயன்படுத்தும் iPhone பயனர்களை WhatsApp ஏற்கனவே எச்சரிக்கை செய்யத் தொடங்கியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – போக்குவரத்து மாற்றம்! காரணம் இதோ!

அதன்படி, வாட்ஸ்அப் செயலியின் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் மென்பொருள் விரைவில் செயல்படுவதை நிறுத்தும் என்ற அறிவிப்பை ஏற்கனவே பெற்றுள்ளனர். செய்தியிடல் பயன்பாட்டைத் தொடர்ந்து பயன்படுத்த பயனர்கள் தங்கள் ஐபோன்களை அப்டேட் செய்ய வேண்டும். ஐபோன் பயனர்கள் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்த, iOS 12 அல்லது புதிய அப்டேட் அவசியம் என்று WhatsApp முன்பு அறிவித்தது. ஆண்ட்ராய்டு சாதனங்களின் பயனர்கள் மென்பொருளைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை என்று Mashable India தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

iOS 10 மற்றும் iOS 11 ஆகியவை காலாவதியான பதிப்புகள் ஆக உள்ளது. மேலும் பெரும்பாலான ஆப்பிள் ஃபோன்களில் ஏற்கனவே சமீபத்திய அப்டேட்கள் நிறுவப்பட்டிருக்கலாம். ஐபோனை உடனடியாக அப்டேட் செய்வது நல்லது. சமீபத்திய iOS பதிப்பைப் பெற விரும்புவோர், Settings ஐ தேர்வு செய்து, அதில் General என்பதை கிளிக் செய்த் பின்னர், Software Update என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5சி ஆகிய இரண்டு ஐபோன் மாடல்கள் மட்டுமே இந்த மாற்றத்தால் பாதிக்கப்படும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!