LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் அறிவிப்பு – டெபாசிட் கட்டணம் திடீர் அதிகரிப்பு!

0
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் அறிவிப்பு - டெபாசிட் கட்டணம் திடீர் அதிகரிப்பு!
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் அறிவிப்பு - டெபாசிட் கட்டணம் திடீர் அதிகரிப்பு!
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் அறிவிப்பு – டெபாசிட் கட்டணம் திடீர் அதிகரிப்பு!

சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. அதாவது புதிய சிலிண்டர் இணைப்பு வாங்குவதற்கான டெபாசிட் கட்டணம் ரூ. 750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரெகுலேட்டர் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது பற்றிய விபரங்களை காண்போம்.

சிலிண்டர் விலை

கேஸ் சிலிண்டர் குறைந்த பட்சம் 5.5 கிலோ முதல் 33 கிலோ வரை எடையுடன் உள்ளது. பொதுவாக கேஸ் சிலிண்டர் யாரும் பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். இவை மக்களின் வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. மத்திய அரசு சார்பாக பிரதமர் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு தகுந்த மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒரு வருடமாக கேஸ் சிலிண்டர் விலையானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி, கொரோனா பாதிப்பு மற்றும் உக்ரைன் போர் காரணமாக பங்கு சந்தையில் நிலவரம் மிகவும் சரிவடைந்தது. இதனால் சமையல் எரிவாயு, எண்ணெய் மற்றும் தங்க நகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் விலை உயர்த்தப்பட்டது. அந்த வகையில், புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. இதன் மூலம் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் கட்டணம் ரூபாய் 750 அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்த கட்டண உயர்வானது புதிதாக பெறப்படும் இணைப்புகளுக்கு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான கட்டணம் 1,450 ரூபாயாக இருந்தது. தற்போது இது 2,200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 கிலோ சிலிண்டர் டெபாசிட் தொகையை 800 ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக சிலிண்டர் கேஸ் இணைப்பு பெறுபவர்கள் மேற்கொண்டும் சிலிண்டர் கேஸ் வாங்குபவர்களுக்கு ரூபாய் நான்காயிரத்து 600 ரூபாய் ஆக கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here