விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – திடீரென குறைந்த TRP ரேட்டிங்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – திடீரென குறைந்த TRP ரேட்டிங்!

எப்போதும் பாக்கியலட்சுமி தொடர் தான் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கும். ஆனால், இந்த வாரம் பாக்கியலட்சுமி தொடர் டிஆர்பியில் 8, 9 ஆகிய இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே பாக்கியலட்சுமி தொடரை தான் மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து கொண்டிருக்கின்றனர். அதாவது படிக்காத அப்பாவி பெண்ணாக இருக்கும் பாக்கியாவை கோபி பிடிக்காமல் திருமணம் செய்து கொள்கிறார். தற்போது வரைக்கும் பாக்கியாவுடன் பிடிக்காமல் தான் குடும்பம் நடத்தி வருகிறார்.

என்ன தான் பாக்கியா படிக்காவிட்டாலும் தனக்கு தெரிந்ததை வைத்து தொழில் தொடங்க வேண்டும் என நினைக்கிறார். அதற்கும் கோபி ஒப்புக்கொள்ளவில்லை. பின்பு, குடும்பத்தில் உள்ள அனைவரும் பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்ததால் ஒப்புக்கொள்கிறார். பாக்கியாவின் கேட்டரிங் தொழில் தற்போது நன்றாக சென்று கொண்டிருக்கிறது. கோபியை விட பாக்கியா நல்ல லாபம் பார்த்து வருகிறார். தன்னையே உலகம் என்று நினைத்து வாழும் பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை கோபி திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

எப்போதும் பாக்கியலட்சுமி தொடர் தான் டிஆர்பியில் முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போது கூட சிறந்த சீரியல் என்கிற விருதை பாக்கியலட்சுமி சீரியல் தான் வென்றது மற்றும் சிறந்த வில்லனுக்கான விருதை கோபி வாங்கினார் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதை பாக்கியா வாங்கினார். இப்படி விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் அனைத்து விருதுகளையும் அள்ளி குவித்த பாக்கியலட்சுமி தொடர் தற்போது டிஆர்பியில் 8, 9 ஆகிய இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!