Airtel வாடிக்கையாளர்களுக்கு ஷாக் தகவல் – 5G வந்தால் ரீசார்ஜ் கட்டணம் அதிகரிக்குமா?

0
Airtel வாடிக்கையாளர்களுக்கு ஷாக் தகவல் - 5G வந்தால் ரீசார்ஜ் கட்டணம் அதிகரிக்குமா?
Airtel வாடிக்கையாளர்களுக்கு ஷாக் தகவல் - 5G வந்தால் ரீசார்ஜ் கட்டணம் அதிகரிக்குமா?
Airtel வாடிக்கையாளர்களுக்கு ஷாக் தகவல் – 5G வந்தால் ரீசார்ஜ் கட்டணம் அதிகரிக்குமா?

இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் அதிக கட்டணத்துக்கு அதன் 5ஜி சேவைகளை வழங்கத் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

5G கட்டணம்:

இந்தியாவின் முதல் 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்தியாவின் 19 பில்லியன் டாலர் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்தது. அதற்கு அடுத்ததாக, ஏர்டெல் நிறுவனம் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 24,740 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ரூ.88,078 கோடிக்கும், ஏர்டெல் நிறுவனம் 19,867 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ரூ.43,084 கோடிக்கும் வாங்கியது.

அதற்கு அடுத்தபடியாக வோடஃபோன் நிறுவனம் ரூ.18,784 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ரூ.212 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து இந்தியத் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் 5ஜி சேவையை வழங்குவதைக் குறித்து ஆலோசனைகளைச் செய்து வருகின்றன. இது குறித்து இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அகில் குப்தா முக்கிய தகவலைக் கூறியுள்ளார்.

Post Office இல் தங்கப்பத்திரம் திட்டம் – ஆகஸ்ட் 26 இறுதி நாள்!

அதாவது அகில் குப்தா அவர்கள் சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஏர்டெல் நிறுவனம் அதிக கட்டண திட்டங்களுடன் 5ஜி சேவைகளை வழங்க வாய்ப்புள்ளது என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய குப்தா அவர்கள், ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் சூப்பர் பாஸ்ட் நெட்வொர்க்கிற்கு பிரீமியத்தை வசூலிக்காவிட்டாலும், அதிக விலைத் திட்டங்களைத் தொடங்கலாம் எனக் கூறியுள்ளார். உலகளாவிய விகிதங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கட்டணத் திட்டங்கள் மிகவும் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்ட குப்தா, பயனர்கள் மிக வேகமான இணைய வசதியுடன் அதிக டேட்டாவைப் பயன்படுத்துவதால், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிக வருவாயை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!