தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் – ஜூன் 13ம் தேதி முதல் கடைகள் மூடல்?

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் - ஜூன் 13ம் தேதி முதல் கடைகள் மூடல்?
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் - ஜூன் 13ம் தேதி முதல் கடைகள் மூடல்?
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் – ஜூன் 13ம் தேதி முதல் கடைகள் மூடல்?

தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் செவ்வாய் கிழமை முதல் 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மற்றொரு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஷாக் நியூஸ்:

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் ஜூன் 7ம் தேதி முதல் 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டிருந்தது. (No Work No Pay) என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியிருந்தது.

TN Job “FB  Group” Join Now

ஆனாலும், எதையும் பொருட்படுத்தாமல் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

பள்ளி & கல்லூரிகளில் இனி முகக்கவசம் கட்டாயம் – மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மேலேயும் நியாய விலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு கனிவுடன் பரிசீலித்து வருகிறது. எனவே, நியாய விலைக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் வருகிற 13-ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ரேசன் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் போராட்டத்தின் போது பொதுமக்கள் பாதிக்காதவாறு இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here