வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு ஷாக் நியூஸ் – உயரும் EMI கட்டணம்!

0
வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு ஷாக் நியூஸ் - உயரும் EMI கட்டணம்!
வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு ஷாக் நியூஸ் - உயரும் EMI கட்டணம்!
வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு ஷாக் நியூஸ் – உயரும் EMI கட்டணம்!

இந்தியாவில் அனைத்து வங்கிகளிலும் எம்.சி.எல்.ஆர். கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே அந்த வங்கிகளில் வீட்டுக் கடன், கார் கடன் அல்லது தனிநபர் கடன் வாங்கியிருந்தால் MCLR கட்டணத்தை அதிகரித்த பிறகு கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உயரும் EMI கட்டணம்:

இந்தியாவின் முன்னணி வங்கிகள் ,அனைத்து கால வரம்புகளுக்கான கடன் வழங்குவதற்கான இறுதிநிலைச் செலவு(எம்சிஎல்ஆர்) விகித்ததை 10 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதனால் வங்கியில் கடன் பெற்றிருப்பவர்களின் மாதந்தோறும் செலுத்தும் இஎம்ஐ கட்டணம் இனி வரும் மாதங்களில் உயரக்கூடும். எம்சிஎல்ஆர் அல்லது மார்ஜினல் காஸ்ட் ஆப் ஃபண்ட் அடிப்படையிலான கடன் வழங்கும் முறை என்பது கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் முறை. இது ரிசர்வ் வங்கியால் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2016ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின் வழங்கப்படும் அனைத்து கடன்களும் எம்சிஎல்ஆர் படி இருக்கும்.எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இஎம்ஐ கட்டணம் உயரும், மற்ற பெஞ்ச் மார்க் அடிப்படையில் வாங்கியவர்களுக்கு உயராது. எஸ்பிஐ வங்கியின் இபிஎல்ஆர் விகிதம் 6.65 சதவீதமாகவும், ரெப்போ அடிப்படையிலான கடன் விகிதம் (ஆர்எல்எல்ஆர்) 6.25 சதவீதமாகவும் கடந்த 1ம் தேதி முதல் தொடர்ந்து வருகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா:

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) MCLR கட்டணத்தை 10 அடிப்படை புள்ளிகள் (0.10 சதவீதம்) உயர்த்தி உள்ளது. இதனால் SBI வங்கியின் அனைத்து வகையான கடன்களுக்கான EMI தொகையும் உயரும்.

பேங்க் ஆஃப் பரோடா:

பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் (BoB) ஏப்ரல் 12 முதல் வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர் வாங்கிய கடனின் EMI முன்பை விட அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ExamsDaily Mobile App Download

ஆக்சிஸ் வங்கி:

ஆக்சிஸ் வங்கியும் தனது வட்டியை உயர்த்தியுள்ளது. MCLR கட்டணம் 0.05 சதவீதம் அதிகரித்துள்ளது. உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கி:

கோடக் மஹிந்திரா வங்கியும் MSLR கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதம் ஏப்ரல் 16 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here