தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – நாளை கடைகள் இயங்குமா? திடீர் அறிவிப்பு!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு - நாளை கடைகள் இயங்குமா? திடீர் அறிவிப்பு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு - நாளை கடைகள் இயங்குமா? திடீர் அறிவிப்பு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – நாளை கடைகள் இயங்குமா? திடீர் அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி, சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில்‌ நாளை (வெள்ளிக்கிழமை) மாநிலம்‌ தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக நியாய விலைக்கடை பணியாளர்கள்‌ சங்கம்‌ தெரிவித்துள்ளது.

திடீர் அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கும், அகவிலைப்படி உயர்வினை, அரசு ஆணையின்படி நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ், மாண்புமிகு முதலமைச்சர் அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, அகவிலைப்படி,17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அகவிலைப்படி, 1.1.2022 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது

Exams Daily Mobile App Download

அரசு ஊழியர்களுக்கான 31 சதவீதம் அகவிலைப்படியினை கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் கூட பொதுமக்கள் நலனுக்காக நியாய விலைக்‌ கடை ஊழியர்கள்‌ அயராது பணியாற்றி வந்தனர். எனவே தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில்‌, நியாய விலைக்‌ கடை ஊழியர்கள்‌ போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Muthoot Finance நிறுவனத்தில் ரூ. 2 லட்சம் ஊதியத்தில் வேலை – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்…!

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர், அரசு ஊழியர்களுக்கு உயர்த்துவது போல நியாய விலைக்‌ கடை ஊழியர்களுக்கு கண்டிப்பாக உயர்த்தலாம்‌ என்று அமைச்சர் தெரிவித்தும், இதுவரை இதற்கான அறிவிப்பை அரசு அறிவிக்கவில்லை. கடந்த மாதம் சட்டப்பேரவையில், ரேஷன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். இருப்பினும் இது குறித்து எந்த நடவடிக்கையும்‌ எடுக்கவில்லை. இதனால்‌ அமைச்சரின் பேச்சில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால் சென்னை கீழ்பாக்கத்தில்‌ உள்ள கூட்டுறவு சங்கங்களின்‌ பதிவாளர்‌ அலுவலகம்‌ முன்பு நாளை (வெள்ளிக்கிழமை) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக நியாய விலைக்கடை பணியாளர்கள்‌ சங்கம்‌ அறிவித்துள்ளது என்று கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here