ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு – கிரெடிட் கார்டு, செக் கட்டணங்கள் அதிகரிப்பு!

0
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு - கிரெடிட் கார்டு, செக் கட்டணங்கள் அதிகரிப்பு!
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு - கிரெடிட் கார்டு, செக் கட்டணங்கள் அதிகரிப்பு!
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு – கிரெடிட் கார்டு, செக் கட்டணங்கள் அதிகரிப்பு!

ICICI வங்கி கிரெடிட் கார்டு கட்டணங்கள் மற்றும் செக் ரிட்டர்ன் கட்டணம் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் வங்கி வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாக் அறிவிப்பு :

ICICI வங்கி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாகும். இது மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வகையில் ICICI Bank கிரெடிட் கார்டுகளுக்கு கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் கிரெடிட் கார்டு கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

TNTRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் தேர்வுகள்..!

இந்த வகையில் கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணம் 2.50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணமாக 500 ரூபாய் வசூலிக்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதேபோல, auto-debit return கட்டணமும் 2% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்ச கட்டணம் 500 ரூபாயாகும். மேலும் வங்கி தாமதக் கட்டணங்களுக்கும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது எனினும், 100 ரூபாய்க்கு உட்பட்ட கட்டணத்துக்கு எந்தவித தாமத கட்டணமும் கிடையாது.

மாநிலம் முழுவதும் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – அரசின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

இந்த வகையில் நிலுவைத் தொகை ரூ.100 – ரூ.500 இருந்தால் தாமத கட்டணம் ரூ.100 ஆகும். மேலும் நிலுவைத் தொகை ரூ.501 – ரூ.5000 இருந்தால் தாமத கட்டணம் ரூ.500 ஆகும். இதனை தொடர்ந்து நிலுவைத் தொகை ரூ.5001 – ரூ.10000 இருந்தால் தாமத கட்டணம் ரூ.750 ஆகும். நிலுவைத் தொகை ரூ.10,001 – ரூ.25,000 இருந்தால் தாமத கட்டணம் ரூ.900 ஆகும். நிலுவைத் தொகை ரூ.25,011 – ரூ.50,000 இருந்தால் தாமத கட்டணம் ரூ.1000 ஆகும். மேலும் நிலுவைத் தொகை ரூ.50,000 மேல் தாமத கட்டணம் ரூ.1200 ஆகும். இந்தக் கட்டணங்களுடன் GSTயும் சேர்த்து வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!