குக் வித் கோமாளி ‘சிவாங்கி’ Anchor ஆக அவதாரம் – அதுவும் இந்த ஷோவிலா? ரசிகர்கள் ஷாக்!

0
குக் வித் கோமாளி 'சிவாங்கி' Anchor ஆக அவதாரம் - அதுவும் இந்த ஷோவிலா? ரசிகர்கள் ஷாக்!
குக் வித் கோமாளி 'சிவாங்கி' Anchor ஆக அவதாரம் - அதுவும் இந்த ஷோவிலா? ரசிகர்கள் ஷாக்!
குக் வித் கோமாளி ‘சிவாங்கி’ Anchor ஆக அவதாரம் – அதுவும் இந்த ஷோவிலா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர் பாடகி சிவாங்கி. அவர் அந்த நிகழ்ச்சியை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக புகழின் உச்சிக்கு சென்றார். இந்நிலையில் அவர் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் Anchor (தொகுப்பாளினி) ஆக உள்ளார். அது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

Anchor சிவாங்கி:

விஜய் டிவியில் சிறந்த பாடகர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்த கலந்து கொண்டவர் சிவாங்கி. அந்த நிகழ்ச்சியில் அவரின் நகைச்சுவை குணம் காரணமாக அவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் அவரது இயற்கையான குணமே அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தற்போது வெள்ளித்திரையில் பல பாடல்களையும் படங்களிலும் அவர் தற்போது பிசியாக இருக்கிறார்.

சன் டிவி ‘ரோஜா’ சீரியல் இன்றைய எபிசோட் – வெளியான ப்ரோமோ!

இந்நிலையில் மாறுபட்ட கோணத்தில் அவர் தற்போது தொகுப்பாளினி ஆகி உள்ளார். அவர் முதன் முதலில் கலந்து கொண்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது தொகுப்பாளினியாக அவர் உருவெடுத்திருக்கிறார். இது குறித்து ‘ஆங்கர் சிவாங்கி’ என்று எழுதப்பட்ட அறையின் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சிவாங்கி, இரண்டு வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் இதே சூப்பர் சிங்கர் செட்டில் போட்டியாளராக பங்கேற்றதையும் நினைவு கூர்ந்து இருக்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் லட்சுமி அம்மா செய்த காரியம் – வைரலாகும் புகைப்படம்!!

ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரியங்காவிற்கு என்ன ஆனது என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. அவர் தொகுத்து வழங்கிய ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியை கூட மிக அண்மையில் பிரியங்கா அல்லாமல் மா.கா.பா ஆனந்த் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரியங்கா உறுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதனால் அவர் குவாரண்டைனில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!