விஜய் டிவி “குக் வித் கோமாளி” ஷிவாங்கிக்கு நடந்த சோகம் – அவருடைய அம்மா சொன்ன தகவல்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "குக் வித் கோமாளி" ஷிவாங்கிக்கு நடந்த சோகம் - அவருடைய அம்மா சொன்ன தகவல்!
விஜய் டிவி “குக் வித் கோமாளி” ஷிவாங்கிக்கு நடந்த சோகம் – அவருடைய அம்மா சொன்ன தகவல்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாடகி ஷிவாங்கி. அவருடைய அம்மா ஷிவாங்கியை பற்றி மனம் திறந்து பேசும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

குக் வித் கோமாளி ஷிவாங்கி:

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு பாடகியாக அறிமுகமானவர் ஷிவாங்கி. அதில் அவருடைய குழந்தை தனமான பேச்சால் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் மூலம் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வர வாய்ப்பு கிடைத்தது. அவர் முதல் சீசனில் புகழ் உடன் இணைந்து செய்த லூட்டிகள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் மூன்று சீசன்களிலும் கோமாளியாக கலக்கினார்.

‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுஜிதா வரை – Social Mediaவில் சம்பாரிக்கும் சீரியல் நடிகைகள்!

இந்நிலையில் அவர் மூன்றாவது சீசனில் முதல் எபிசோட் மட்டுமே வந்த நிலையில் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகினார். அதனால் ரசிகர்கள் என்ன காரணம் என தெரியாமல் குழப்பம் அடைந்தனர். சென்ற வார எபிசோடில் ஷிவாங்கிக்கு பதிலாக புகழ் வந்தார். அவருடைய வருகைக்காக பலர் காத்திருக்கும் நிலையில் ஷிவங்கியை பலர் மறந்துவிட்டனர். இந்நிலையில் ஷிவாங்கி பற்றி அவர் அம்மா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

டிகிரி முடித்தவரா? – மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் | ரூ.67000/- ஊதியம்..!

அதில் அவர் உடன் வேலை செய்யும் பலருக்கு ஆதரவாக பேசுவாள் ஆனால் அவளுக்கு யாரும் அப்படி செய்தது இல்லை என சொல்லி இருக்கிறார். மேலும் ஷிவாங்கியின் சிறு வயது லூட்டிகளை பற்றி அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் ஷிவாங்கியை போலவே அவரும் குழந்தைத்தனமாக பல விஷயங்களை ஷேர் செய்து இருக்கிறார். மேலும் ஷிவாங்கிக்கு கஷ்டம் என்றால் வெளியே சொல்லாமல் பாத்ரூமில் அழுவாள் என சொல்லி இருக்கிறார். ஷிவாங்கியின் அம்மாவும் ஒரு கர்நாடக பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here