ஹிஜாப் பிரச்சனை குறித்து கருத்து பதிவிட்ட ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி – ரசிகர்கள் விமர்சனம்!

0
ஹிஜாப் பிரச்சனை குறித்து கருத்து பதிவிட்ட 'குக் வித் கோமாளி' ஷிவாங்கி - ரசிகர்கள் விமர்சனம்!
ஹிஜாப் பிரச்சனை குறித்து கருத்து பதிவிட்ட 'குக் வித் கோமாளி' ஷிவாங்கி - ரசிகர்கள் விமர்சனம்!
ஹிஜாப் பிரச்சனை குறித்து கருத்து பதிவிட்ட ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி – ரசிகர்கள் விமர்சனம்!

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஹிஜாப் பிரச்சனைகளுக்கு சமூக வலைத்தளங்களில் சில பிரபலங்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்,

ஹிஜாப் பிரச்சனை:

கர்நாடகா மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிய கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை தொடர்ந்து, கல்லூரிக்கு மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து வர அவரை உடன் படிக்கும் சக மாணவர்கள் வெறுப்பேத்தும் விதமாக ஜெய் பீம் என முழக்கமிட்டனர். அவர்களை பார்த்து கடுப்பான அந்த பெண் “அல்லாஹு அக்பர்” என முழக்கமிட்டார். இது குறித்த வீடியோ வைரலாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

ஜீ தமிழ் “புதுப்புது அர்த்தங்கள்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – சந்தோசை காப்பாற்றுவாரா லட்சுமி?

இந்நிலையில் இந்த ஹிஜாப் பிரச்சனை குறித்து சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலர் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து இருக்கின்றனர். முதலில் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பாடகி ஷிவாங்கி ஹிஜாப் பிரச்சனை பற்றி கூறுகையில், நாம் பள்ளி படிக்கும் போது நமது அருகில் இருப்பது ஹிந்துவா முஸ்லிமா கிறிஸ்டியனா என தெரியாமல் இருந்தது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும் யார் நல்ல சாப்பாடு கொண்டு வருவார் என, இப்படி தான் நம்ம பள்ளி பருவம் இருந்தது.

ஆனால் இப்போது நடப்பது எல்லாம் வருங்கால சமுதாயத்தை சீரழிப்பது போல இருக்கிறது என சொல்லி இருக்கிறார். அடுத்து ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் அவர்களின் மகள் வெளியிட்ட பதிவில் பெண்கள் உடை அணிவது அவர்களது விருப்பம், சில Insecure ஆண்கள் தான் இது போல செய்வார்கள் என கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் போட்டியிட்டு தற்போது திமுகவில் இணைந்து இருக்கும் பத்ம ப்ரியா கூறுகையில், நாம் ஜாதி மத பேதமில்லாமல் தான் பழகி வருகிறோம்.

‘குக் வித் கோமாளி’ மணிமேகலையை ஒரு வருடம் கழித்து பழிவாங்கிய ரக்சன் – வைரல் பதிவு!

ஆனால் இந்த ஒரு வாரமாக நடப்பது எல்லாம் புரியாமல் இருக்கிறது. இது எதிர்கால சமூதாயத்தை பாதிக்கும், இந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக அனைவரும் நண்பர்களாக ஒன்றாக அமர்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் இப்போது அவர்களுக்கு இடையே இதனை வேறுபாடு என மனம் வருத்தப்பட்டு பேசி இருக்கிறார். ஹிஜாப் அணிவதும் அணியாமல் இருப்பதும் அவர்களின் சொந்த விருப்பம் என சொல்லி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!