தமிழகத்தில் ‘ஸ்வர்மா’ சாப்பிட விரைவில் தடை? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

0

தமிழகத்தில் ‘ஸ்வர்மா’ சாப்பிட விரைவில் தடை? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் உள்ள பொது மக்கள் ஷவர்மா சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று,தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனால் மக்கள் இதனை கருத்தில் கொண்டு மக்கள் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஷவர்மா

நாட்டில் சமீபத்தில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி பலியான சம்பவம் நாட்டையே மிரள வைத்து விட்டது..மேலும் தேவானந்தா என்ற 16 வயது மாணவி காசர்கோர்ட்டில் Ideal Food Point என்ற கடையில் ஷவர்மா சாப்பிட்டு, பலியானதை இப்போது வரை யாராலும் நம்ப முடியவில்லை. மேலும் அதே கடையில் ஷவர்மா சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து அந்த பகுதியில் அனைத்து ஷவர்மா கடைகளையும் மூடி விட்டன. அதை தொடர்ந்து இந்த செயல் தமிழகத்திலும் நடந்து விட்டது. இந்த நிலையில் 3 ஷவர்மா சாப்பிட்ட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களான மதுரை, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முக்கிய ஓட்டல்களில் சோதனை நடத்தினர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனத்திற்கு கிடைத்த அங்கீகாரம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

இந்நிலையில் இன்று, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கேரள மாநிலத்தை போல் தமிழகத்திலும் சர்மாவிற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். தமிழகத்தில் ஷவர்மா கடைகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு அறிவுரை வழங்கி, அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

அதனை தொடர்ந்து, ஷவர்மா தயாரிப்பதற்கான உரிய வழிமுறைகளை செய்யாவிட்டால் அதை சாப்பிடுபவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மேலைநாட்டு உணவு வகையான ஷவர்மா அந்த நாட்டின் மக்களின் தட்பவெப்ப நிலைக்கு பொருந்தும். ஆனால் நம் நாட்டின் வெப்ப நிலைக்கு பொதுமக்கள் ஷவர்மா போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!